ஹபடைடிஸ் ஏ

ஹபடைடிஸ் ஏ என்பது கல்லீரலில் ஹபடைடிஸ் ஏ என்னும் வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோய்.
  காரணங்கள்
ஹபடைடிஸ் ஏ அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் வழியாக, ஹபடைடிஸ் ஏ நோய் கண்ட நபருடன் நெருங்கி பழகுவதினால் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஹபடைடிஸ் ஏ வைரஸ், நோய்கண்ட நபருக்கு, நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 15 முதல் 45 நாட்களில் முன் மற்றும் பாதிப்புகண்ட முதல் வாரகாலத்தில் மலத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த வைரஸ் இரத்தம் மற்றும் பிற உடற்கூறு சுரப்பிகள் வழியாகவும் தொற்றக்கூடியது. பொதுவான ஹ்படைடிஸ் வைரஸ் நோய் தொற்றுகளாவன, ஹபடைடிஸ் பி மற்றும் சி. ஆகும். ஹபடைடிஸ் ஏ என்பது மிக குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

  • மஞ்சள் காமாலை
  • உடல் சோர்வு
  • பசியின்மை
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • மிதமான காய்ச்சல்
  • வெளிர்ந்த அல்லது களிமண் நிறத்தில் மலம் கழித்தல்
  • கருமையான சிறுநீர் கழித்தல்
  • உடல் ழுமுவதும் ஏற்படும் அரிப்பு தன்மை

தடுப்பு முறைகள்:

  • ஹபடைடிஸ் பாதிக்கப்பட்ட நபர் மிகத்தூய்மையாக இருத்தல் அவசியம். அவரது ரத்தம்,மலம், உடல் வியர்வை போன்றவற்றை சுத்தம் செய்த பின்னர் சோப்பு கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள் வேண்டும்.
  • கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை கழுவி சுத்தம் செய்தல் வேண்டும்.
  • கலப்படமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதை தவிர்த்திடல் வேண்டும்.
  • ஹபடைடிஸ் ஏ நோய் எதிர்க்கும் தடுப்பூசிகள் கிடைக்கினறன. தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்காவது வாரத்திலிருந்து இம்மருந்தானது இந்நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நீண்ட நாள் பாதுகாப்பிற்கு, முதல் ஊசிபோட்ட ஆறிலிருந்து பணிரெண்டு மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் என்னும் கூடுதல் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும்

தடுப்பூசி யார் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்??

  • ஹ‎படைடிஸ் ஏ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.
  • நீண்ட நாட்களாய் ஹ‎படைடிஸ் பி அல்லது சி வைரஸ் நோய் தொற்று கண்டவர்கள்.

ஹபடைடிஸ் ஏ பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: