ஹபடைடிஸ் பி
ஹபடைடிஸ் பி வைரஸ் கண்ட பெரும்பாலான நபர்கள் 6 மாத காலத்திற்குள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்த குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹபடைடிஸ் பி என்பர்.
ஹபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்புன் இருக்கும். ஹபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம், ஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை. இவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து பிறருக்கு பரவச்செய்கின்றனர். இவ்வகை நோய்கண்ட நபரில், கல்லீரலானது நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவையாவன, சிர்ரோஸிஸ் (கல்லீரலில் ஏற்படும் தழும்புக்காயங்கள்) மற்றும் கல்லீரல் புற்று நோய்.
காரணங்கள்
ஹபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.- சுகாதார பாதுகாப்பு மையங்களில் நோய்கண்ட நபரின் இரத்தத்தை கையாள்வதின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.
- நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்வதால்
- நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்கு செலுத்துவதின் மூலம்
- ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது
- நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.
- நோய் கண்ட தாய்மூலம் , இந்நோயினை குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறதுஅல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது.
அறிகுறிகள்
- சோர்வு உடலநலம் குன்றுதல்.
- மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல்
- குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுவலி
- மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.
தடுப்பு முறைகள்
- இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்
- தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்
- குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.


