கல்லீரல் பாதிப்பு நோய் (சிர்ரோஸிஸ்)
சிர்ரோஸிஸ் என்பது கல்லீரலை பாதிக்கும் நோய். நாட்பட்ட கல்லீரல் நோய் காணப்படும்போது சிர்ரோஸிஸ் தோன்றுகிறது. இதன் விளைவாக கல்லீரலில் வடுக்காயங்கள் மற்றும் செயலற்ற தன்மை ஏற்படும். இதனால் அடிக்கடி வயிற்றுப் பகுதியில் நீர் சேர்தல் (அசைடிஸ்), ரத்தம் உறைதலால் ஏற்படும் குறைபாடுகள் (கோயாகிலோபதி), கல்லீரல் ரத்த நாளங்களில் ஏற்படும் உயர் அழுத்தம் போன்றவை ஏற்படும்
காரணங்கள்
சிர்ரோஸிஸ் நாட்பட்ட கல்லீரல் பாதிப்பால் ஏற்படக்கூடியது.
அறிகுறிகள்
- வயிற்றுப் பகுதியில் நீர் சேர்தல் (அசைடிஸ்)
- கால்களில வீக்கம் ஏற்படுதல்
- இரத்தவாந்தி
- குழப்பமான மனநிலை
- மஞ்சள் காமாலை
- தோலின் மேல் சிறிய சிவப்பு நிற சிலந்திவடிவான இரத்த நாளங்கள் தோன்றுதல்
- உடல் பலவீனம்
- உடல் எடை இழப்பு
- குமட்டல் மற்றும் வாந்தி
சிர்ரோஸிஸ்ஸிற்கான பிற அறிகுறிகள்:
- அன்றாடம் கழிக்கும் சிறுநீரின் அளவு குறைதல்.
- உடல் முமுவதும் வீக்கமடைதல்.
- வெளிர்ந்த அல்லது கருமையான நிறத்தில் மலம் கழித்தல்.
- மூக்கு அல்லது பல் ஈறு பகுதியில் இரத்தம் வடிதல்.
- கைனிகோம்தாஸ்டியா பெண்களின் மார்பகங்கள் போல் ஆண்களுக்கும் ஏற்படுதல்.
- வயிற்று வலி
- வயிற்று அஜீரணக்கோளாறு
- காய்ச்சல்
தடுப்பு முறைகள்
- மது அருந்துதலை தவிர்த்தல்
- இரத்தத்தில் செலுத்தும் மருந்து வகைகளை தவிர்ப்பதின் மூலம் (அல்லது சுத்தமான ஊசிகளை பயன்படுத்தவும் மற்றும் ஊசிகளை மற்றவருடன் ஒருபொழதும் பகிர்ந்து கொள்ளாதிருத்தல்). இதனால் ஹ்படைடிஸ் பி மற்றும் சி போன்ற கல்லீரல் வியாதிகளையும் குறைக்கலாம்
கல்லீரல் பாதிப்பு நோய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)


