ஒட்டுண்ணியால் ஏற்படும் கல்லீரல் நோய் (அமீபிக் லிவர் ஆப்ஸிஸ்)
அமீபிக் லிவர் அப்ஸிஸ் என்பது எண்டமீபா ஹிஸ்டோலிடிகா எனும் ஒட்டுண்ணியால், கல்லீரலில் ஏற்படும் நோய். இதில் கல்லீரல் வீ’ககம் கண்டு, சீழ் வைத்து, கட்டிகள் தோன்றும்
காரணங்கள்
அமீபிக் லிவர் அப்ஸிஸ் என்பது எண்டமீபா ஹிஸ்டோலிடிகா எனும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இவ்வகை உயிரிகள் இரத்தத்தின் மூலமாக கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மலத்தில் உள்ள ஒட்டுண்ணி முட்டைகளினால் கலப்பட உணவு அல்லது தூய்மையற்ற தண்ணீரை உட்கொள்ளும்போதும், மலப்பொருட்களை உரமாக பயன்படுத்தும் போதும், மற்றும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும்போதும் இவ்வகை ஒட்டுண்ணிகள் மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோயை அதிகரிக்கக் கூடிய காரணிகள்
ஊட்டச்சத்து குறைவு, வயது முதிர்வு, மகப்பேறு காலம், ஸ்டிராய்டுகளை பயன்படுத்துதல், புற்று நோய், நோய் எதிர்ப்பு தன்மை குறைபாடு, போதை பழக்கம், ஓரினச் சேர்க்கை குறிப்பாக ஆண்களில்
அறிகுறிகள்
- காய்ச்சல்
- வயிற்றுப்பகுதியில் வலி தோன்றும் குறிப்பாக வலது பக்கத்தின் மேற்பகுதியில் வலி காணப்படும். வலி கடுமையாகவும் தொடர்ந்தும் அல்லது குத்துவலிபோல் காணப்படலாம்
- பொதுவான அசவுகரியங்கள் அல்லது உடல்சுகவீனம்
- வியர்வை கொட்டுதல்
- சீதளம்
- பசியின்மை
- உடல் எடை இழப்பு
- பேதி
- காமலை நோய் (மஞ்சள்)
- மூட்டு வலி


