ஜெனிடிக் டிஸ்ஆர்டர் (மரபுவழிக் கோளாறு)
மரபுக் கோளாறு என்பது திடீர் மாற்றம் (மியுடேஷன்) எனப்படும் செயலினால், மாற்றி அமைக்கப்பட அல்லது மாறுபாடு அடைந்த மரபிகளால் (ஜீன்) ஏற்படும் ஒரு நோய் ஆகும். பல நோய்கள் மரபியல் நோக்குடையவைகள். பல புற்று நோய்கள் ஒருவருடைய செல்லில் உள்ள மரபி அல்லது மரபிகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இவ்வகை திடீர் மாற்றங்கள், இயல்பாக மற்றும் குறிப்பிட்ட சூழல்களால் (உ.ம்) சிகரட் புகையின் பாதிப்பினால் ஏற்படுகிறது. மற்ற மரபுவழிக்கோளாறுகள் பெற்றோரிடமிருந்து தலைமுறையாக பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இன்றும் பிற மரபுவழிக் கோளாறுகள் மரபிகளின் தொகுப்பான குரோமோ சொபம்களில் உள்ள பிரச்சினைகளினால் ஏற்படுகிறது. உ.ம். டவுன் சின்ட்ரோம்
பிளவு உதடுகள் (க்ளெப்ட லிப்) மற்றும் பிளவு அண்ணம் (க்ளெப்ட் பாளட்)


