சுன்னத்து (ஆண்குறியின் நுனித்தோலை நீக்குதல்)

ஆண்களுக்குஆண்குறியின் முனையில், உறை அல்லது தொப்பி போன்ற நுனித்தோல் காணப்படும்.சுன்னத்து செய்து கொள்ளும் போது, ஆண்குறியின் முனைப்பகுதி வெளியில் தெரியும் வண்ணமாக, நுனித்தோல் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்படும்.

           

  • குழந்தை பிறந்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் சுன்னத்து செய்வது மிக நல்லது. (அநேக வேளைகளில் பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளும் செய்யப்படும்)
  • குறைப்பிரசவத்தில் பிறந்தக் குழந்தைகள் மற்றும் உடல் நலக் குறைவு உள்ள குழந்தைளுக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டப் பிறகே சுன்னத்து செய்யப்படும்
  • ஆண்குறியில் பிரச்சனை உள்ள குழந்தைகட்கு, அறுவைசிகிச்சை முறையில் சரிசெய்தப் பிறகே விருத்த சேதனம் செய்யப்படுகிறது. ஏனெனில், விருத்தசேதனத்தின் போது நீக்கப்படும் நுனித்தோலானது சில சமயங்களில், குறைபாடுடன் உள்ள ஆண்குறியினைச் சரிசெய்ய பயன்படும்.

விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஆண்குறியினை பராமரிக்கும் முறை:

  • ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் இதமான சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவேண்டும்.
  • குழந்தைகளுக்கு கஷ்டம் ஏற்படுத்தாவண்ணம் அவர்களை கவனமாக பராமரிக்க வேண்டும்
  • நுனித்தோல் நீக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போடப்பட்டிருப்பின் தேவையின் அடிப்படையில புதியக் கட்டினை போட்டுக்கொள்ளலாம்
  • விருத்தசேதனத்தின் போது ஏற்படும் காயம் ஆற 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை அப்பகுதி வலியுடன் (அ) மஞ்சள் நிறத்தில் காணப்படும். கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

     - தொடர்ந்து இரத்தக்கசிவு இருத்தல்
     - ஆண்குறியின் முனை சிவப்பாக மாறி 3 நாட்களில் இது மிகவும் மோசமாகும் போது.
     - காய்ச்சல் இருந்தால
     - நோய் தொற்று வந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது சீழுடன் கூடிய சிவப்பு நிற சிறு பிளவைகள் போன்றவை இருந்தால்.
     - விருத்தசேதனம் செய்த 6 முதல் 8 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்கவில்லை என்றால்.




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: