இண்.டி.ஜி. யில் உடல் நலம்
மேம்பாட்டுக்கான திட்டமிடுதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியிலான நோய் சுமையை குறைப்பதற்கு இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல மேம்பாட்டுத் திட்டங்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services - ICDS) போன்ற பொது சுகாதார திட்டங்களும் இதே நோக்கத்தை கொண்டு செயல்படுத்தப்பட்டன. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான ஆயிரமாண்டுக்கான மேம்பாட்டு இலக்குகளை (Millennium Development Goals), அடைய இந்தியா முனைப்புடன் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள, இவை தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவது அவசியமாகும்.
பல மொழி இணையதளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதார தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.





