Document Actions


உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் குழந்தை வளர்ச்சிக்கான வரையறைகள்

உலக சுகாதார அமைப்பு (WHO) குழந்தைகளின் வளர்ச்சியை அளவிட,  குழந்தை வளர்ச்சிக்கான புதிய வரையறைகளை வலியுறுத்துகிறது. இந்த புதிய தரநிர்ணய வரையறைகள் கடைபிடிக்கப்பட்டால், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை கீழ்க்கண்ட நிலைகளில் மாறுபடும்:

    (அ) சராசரி எடையளவு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
    (ஆ) மிகமிகக் குறைவான எடையளவு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
    (இ) 0-6 மாத வயதுள்ள எடை குறைந்த (மிதமான/மத்தியமான அல்ல்து மிகஅதிகமாக)  குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

                ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் இயக்கம் (NRHM) ஆகியவற்றின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை அளவிட ஆகஸ்ட் 15, 2008 முதல், புதிய வரையறைகளை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தாய்ப்பால் பருகும் குழந்தைகளை அடிப்படையாக வைத்து உலக சுகாதார அமைப்பு  வரையறைகளை வகுத்துள்ளது. ஆனால் தேசிய சுகாதார புள்ளிவிபர மையம் (NCHS) தாய்ப்பால் பருகும் குழந்தைகள் மற்றும் புட்டிப்பால் பருகும் குழந்தைகள் ஆகிய இரு வகையினரையும் அடிப்படையாக வைத்து வரையறைகளை வகுத்துள்ளது. தாய்ப்பால் பருகும் குழந்தைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட வரையறைகள் தான் சிறப்பான அளவீடுகளைக் கொடுக்கும். சரியான ஊட்டச்சத்து முறைகள் கடைபிடிக்கப்படுமானால் பல பகுதிகளில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஓரே மாதிரியான உயரம் எடை மற்றும் வளர்ச்சி பெற முடியும் என இந்த புதிய வரையறை உறுதியளிக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் திருமதி. கிருஷ்ணா தீரத் 2009 நவம்பர் 20 அன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: பிரஸ் இன்பர்மேஷன் பீரோ

Opinion Poll
Does RTI bring transparency in Governance?




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: