Document Actions


2009-10 ஆம் ஆண்டில் 193 கிராம நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளது.

'கிராம நீதிமன்றச் சட்டம் 2008' இன் படி, மாநிலங்களில் 193 கிராம நீதிமன்றங்களை   2009-10 ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைக்க உள்ளது. கிராம நீதிமன்றங்கள் அமைக்கத் தேவைப்படும் ஒருமுறை முதலீடான,  18 இலட்ச ரூபாயை (அதிகபட்சமாக) மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். மேலும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் செலவினங்களில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 6.40 இலட்சம் வரை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். கிராம நீதிமன்றச் சட்டம் 2008 ஐ அமல்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் அதனால் மாநிலங்களில் நீதி வழங்கல் முறையில் ஏற்படும் தாக்கம் குறித்து மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் முதலியோருடன் விரிவான கலந்துரையாடல்கள் செய்துள்ளது.

சட்டம் மற்றும்  நீதித்துறை மத்திய அமைச்சர் திரு.வீரப்பமொய்லி 2009 நவம்பர் 19 அன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: பிரஸ் இன்பர்மேஷன் பீரோ
Opinion Poll
Does RTI bring transparency in Governance?




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: