பன்னாட்டு அழைப்புகளுக்கு சிறப்பு சிம் கார்டுகளை ஏர்டெல் வழங்குகிறது
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், 90 சதவீதம் வரை உள்வரும் மற்றும் 66 சதவீதம் வரை வெளிச் செல்லும் அழைப்புகளின் கட்டணத்தை குறைக்கும் வகையில், தனது சொந்த பன்னாட்டு சிம் கார்டை அறிமுகம் செய்ய தாயாராக உள்ளது. தற்போது மொபைல் வாடிக்கையாளர்கள், பன்னாட்டு ரோமிங்கில் மிக அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக, இந்திய வாடிக்கையாளைர் ஒருவருக்கு, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குப் பேச, ஒரு நிமிடத்திற்கு ரூ. 150 கட்டணமாகிறது. அதே போல், அமெரிக்காவில் அழைப்பைப் பெற ரோமிங் கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.100 செலவாகிறது.
ஏர்டெல் பன்னாட்டு கார்ட் வாடிக்கையாளர்களுக்கு, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குப் பேச ஒரு நிமிடத்திற்கு ரூ. 41ம், அழைப்பைப் பெற ரோமிங் கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.10 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டின் விலை ரூ. 500. தற்போது அயல்நாடு செல்பவர்கள், இத்துறையில் வெற்றிகரமான இடைநிலை வியாபார நிறுவனமான ‘மேட்ரிக்ஸ்’ போன்ற கம்பெனிகளின் சிம் கார்டைப் பெற்று வருகின்றனர். எனினும், இந்த சிம் கார்ட் புதிய எண்ணுடன் வருவதால், எளிதாக அழைப்புகளைப்பெறும் வகையில், ஏர்டெல் நிறுவனம் அதனை உள்நாட்டு எண்ணுடன் தொடர்பு எற்படுத்தித் தருகிறது.
ஏர்டெல் பன்னாட்டு கார்ட் அனைத்து நாடுகளிலும் செயல்படும் என்று பார்தி ஏர்டெல்லின் மொபைல் சேவை விற்பனை இயக்குனர் திரு. சிரீஷ் ஜோஷி கூறினார். வாடிக்கையாளர்கள், எவருக்கும் புதிய எண்ணை அளிக்க தேவையில்லை.
மூலம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் (புது தில்லி, ஏப்ரல் 24, 2010)


