தேசிய இணைய செயல்முறை வெளியீடு 6க்கான சாலை வரைபடம் வெளியீடு

அரசாங்கம் இணைய செயல்முறை வெளியீடு 6 க்கான வரைபடத்தினை குறிப்பிட்ட கால அளவில் வெளியிட்டுள்ளது. பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இணைய செயல்முறை வெளியீடு 6 ஐ செயல்படுத்தும் குழுவினை குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்துவதற்கு நியமித்துள்ளது. இதனை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர். திரு.அ.இராசா அவர்கள் புதுதில்லியில் ஜூலை 21, 2010 தேசிய இணைய செயல்முறை வெளியீடு 6க்கான வரைபடத்தினை வெளியிட்டு தெரிவித்தார். இம்முறையின் முதல் வெளியீடான ஐபிவி4 இந்தியாவில் ஏற்கெனவே 18.4 மில்லியன் முகவரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது. ஐபிவி4யில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிகளின் எண்ணிக்கை மார்ச் 2012 அளவில் அதிகரித்து அதில் உள்ள இடம் அதிகம உபயோகிக்கப்படுத்தப்பட்டுவிடும். இந்த ஐபிவி6ம் வரைபடம் பற்றிய அரசாங்கத்தின் வெளியீடு பங்குதாரர்கள் அதிகவேலைத்திறனுடைய ஐபிவி 6 தளத்திற்கு மாற ஒருங்கிணைந்து முயற்சிக்கும் சமயத்தில் வந்துள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐபிவி4 தளத்தில் உலகளவில் இட தேவையினாலும், ஐபி முகவரிகளுக்கான அதிக தேவைகளுக்காகவும் ஐபிவி4ல் இருந்து ஐபிவி 6க்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமாக குறைந்து வரும் ஐபிவி 4 முகவரி இடம், புதிய முகவரிகளுக்கான அதிகரித்துவரும் தேவை, உலகளவில் அதிகரித்து வரும் தொடர்பு வலைத்தளங்கள் போன்றவை இந்த மாற்றம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிவி 6ல் 128 பைட்கள் இடம் இருக்கும். ஆனால் ஐபிவி 4ல் 32 பைட்கள் மட்டுமே இடம் இருக்கும். தொலைத்தொடர்புத்துறையின் தொழில்நுட்ப பிரிவான தொலைத்தொடர்பு பொறியியல் நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி பட்டறைகளை கடந்த ஒரு வருடமாக நடத்தி எல்லா தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதி அளிக்கும் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகள், தொழில்துறை கூட்டமைப்புகள், கல்வி நிறுவனங்கள், உபகரண தயாரிப்பாளர்கள், மற்றும் இதர பங்குதாரர்களை ஐபிவி6 உபயோகிப்பதற்காக அதற்கான வரைபடத்தினை வெளியிட்டுள்ளது.

இந்த தருணத்தில் பேசிய மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு அமைச்சர் திரு.சச்சின் பைலட் அவர்கள் இணையதள முறையிலான தொலைத்தொடர்பு உலகம் முழுவதும் தரமாக பின்பற்றப்படுவது அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார். தற்பொழுது உபயோகத்தில் இருக்கும் ஐபிவி4 கடந்த 2.5 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது என்றும் ஆனால் அதில் செயல்முறை குறைபாடுகள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த புதிய இணைய செயல்பாடு செயல்முறையில் வரையற்ற முகவரிகளுக்கு இடமளிக்கும் என்றும் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு வலைத்தளங்களை உருவாக்குவதற்கு புதிய மற்றும் முன்னேற்றமடைந்த செயல்முறைகளைக் கொண்டுள்ளது என்றும் திரு.பைலட் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புத்துறையின் செயலர் திரு. சந்திரசேகர் அவர்கள் தெரிவிக்கும்பொழுது ஐபிவி 4 விட அதிகமான செயல்திறனுடைய அடுத்த தலைமுறை இணைய செயல்வடிவம் ஐபிவி 6 என்று தெரிவித்தார். இந்தியாவிலுள்ள 1.1 பில்லியன் மக்களுக்கு இணைய தள வசதியினை அளிக்கவல்லது. ஐபிவி 6 இணையத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, மிண்ணனு அரசாங்கம், மற்றும் இதர முக்கியமான அரசாங்கத் திட்டங்களுக்கும் பயன்படும். தற்பொழுது ஐக்கிய அமெரிக்க குடியரசு, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஐபிவி 6 இணையதள செயல்முறையினையே உபயோகிக்கின்றன என்றும் தெரிவித்தார். தகவல் அனுப்பும் இடத்திலிருந்து தகவல் பெறும் இடம் வரை ஐபிவி 6ல் தகவல் பாதுகாப்பானதாக இருக்கும்.

புதிய இணைய முகவரியின் முக்கிய குணநலன்களை விளக்கும்போது, எல்லா முக்கிய சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஐபிவி 6யினை டிசம்பர் 2011ல் கையாளும் என்று திரு.சந்திரபிரகாஷ், உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். எல்லா மத்திய மற்றும் மாநில அமைச்சகங்கள் மற்றும் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட ஐபிவி6 சேவைகளுக்கு மார்ச் 2012ல் மாறிவிடும். ஐபிவி 4லிருந்து ஐபிவி 6க்கான மாற்றம் பல நிறுவனங்களை பாதித்துள்ளது. மேலும் ஒரு தனிப்பட்ட நிறுவனம் இந்த மாற்றத்தினை கொடுக்கமுடியாது. இந்த மாற்றம் எல்லா பங்குதாரர்களை ஆலோசித்து, இந்த மாற்றத்தினை செயல்படுத்தியுள்ளது.

ஆதாரம் : Press Information Bureau




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: