தரம் குறைந்த சேவையாய் இருப்பின் பணத்தை திருப்பி கொடுப்பதாக டாட்டா தொலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது.


வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்திருக்க, மார்ச் 3, 2010 அன்று டாடா தொலைபேசி சேவை நிறுவனம், தங்களது நிறுவனம் அவர்கள் குறிப்பிட்ட சேவை தரத்திற்கு கீழிருந்தால் நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் நிறுவனர் சர் ஜாம்சத்ஜி நசர்வான்ஜி டாடாவின் 171-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
உலகதர அளவிளான, சேவை தரத்தினை அளிக்கும் வகையில் வாடிக்கையாளரின் திருப்தியை அதிகப்படுத்தும் வகையில் சேவை குறித்து அமைந்துள்ளது. இக்குறிப்பில் குறிப்பிட்டுள்ள சேவை தரத்திற்கு கீழ் சேவை இருக்குமாயின் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும்.

  • பில் கட்டண சர்ச்சை உடன்பாடு
  • கால் டிராப் உடன்பாட
  • கைபேசி மாற்றி அளித்தல் உடன்பாடு
  • மதிப்பு கூட்டப்பட்ட சேவை உடன்பாடு மற்றும்
  • கால் பேக் உடன்பாடு

பில் கட்டுவதில் ஏதேனும் சர்ச்சை இருந்தால் 3 நாட்களுக்குள் நிறுவனம் தீர்வு அளிக்கும். இல்லையெனில் கூடுதலாக ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 25-ஐ வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இது போலவே உத்திரவாதம் அளிக்கப்பட்ட வகையில் சேவை இல்லையெனில், அதற்கான நஷ்டஈட்டை, நிறுவனம் அளிக்கும். இவ்வகையான சேவை நாட்டிலுள்ள 20 டெலிகாம் வட்டத்தில் உள்ள டாடா இண்டிகாம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.


மூலம் : தி டைம்ஸ் ஆப் இந்தியா - புதுடெல்லி (மார்ச் 3, 2010)




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: