ஜூன் மாத இறுதியில் தொலைபேசி பயனபடுத்துவோரின் எண்ணிக்கை 671.69 மில்லியனாக உயர்ந்துள்ளது

இந்தியாவில் தொலைபேசி பயனபடுத்துவோரின் எண்ணிக்கை 2010 மே மாத இறுதியில் 653.92 மில்லியனில் இருந்து ஜூன் மாத இறுதியில் 671.69 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2010 ஜூலை 23 அன்று இந்தியா தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி வாடிக்கையாளர் எண்ணிக்க 2.72% சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் தொலைபேசி பயன்பாட்டுக் குறியீடு 56.83 என உயர்ந்துள்ளது. வயர்லெஸ் தொலைபேசி பயனபடுத்துவோரின் எண்ணிக்கை 2010 மே மாத இறுதியில் 617.69 மில்லியனில் இருந்து ஜூன் மாத இறுதியில் 635.51 மில்லியனாக உயர்ந்து 2.91& சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. வயர்லெஸ் தொலைபேசி பயன்பாட்டுக் குறியீடு 53.77 என உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்க

மூலம் : பிரஸ் இன்பர்மேஷன் பீரோ




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: