சிறப்பு அடையாள எண்ணுக்கு, ‘ஆதார்’ என அரசு பெயர் மாற்றியுள்ளது

சிறப்பு அடையாள எண் இனி, ‘ஆதார்’ என்ற பெயரால் அழைக்கப்படும். ஏப்ரல் 26, திங்களன்று, இந்திய சிறப்பு அடையாள அட்டை வாரியம் (The Unique Identification Authority of India - UIDAI) இதன் புதிய பெயர் மற்றும் இலச்சினையை, புது தில்லியில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. 600 மில்லியன் ஆதார் எண்களை, பல பதிவு நிறுவனங்கள் மூலம், நான்கு ஆண்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. “மாற்றங்களை ஏற்படுத்தும் இதன் வல்லமையை தெளிவாக உணர்த்தும் வகையில் இதற்கு ஒரு புதிய பெயர் தேவைப்பட்டது. சிறப்பு அடையாள எண்ணின் சுருக்கப்பெயரான UID என்பது குழப்பமளிப்பதாக உள்ளது. சிலர் அதனை DUI, IUD மற்றும் பலவாறு அழைக்கிறார்கள். ஆதார் அனைத்து மொழிகளிலும் அறியக்கூடியது என்பதால் இதனை தேர்ந்தெடுத்தோம்” என UIDAI தலைவர் திரு. நந்தன் நிலேகனி தெரிவித்தார்.

நமது ஆள்பலம், 2020ல் 800 மில்லியனாக வளரப் போகிறது. இதனை உபயோகமான சக்தியாக மாற்றும் பொருட்டு, அதற்கு தேவைப்படும் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சேவைகளுடன் சிறப்பாக இணைக்கவேண்டும், என திரு. நந்தன் நிலேகனி கூறினார். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்கள் ஒவ்வோருவரும், ஆதார் எண் ஒதுக்கீடு கிடைக்கும் போது, ரூ. 100 பெறுவார்கள். ஒரு நாள் கூலியை துறந்து, ஆதார் எண்ணுக்கு பதிவு செய்ய வரும் மக்களுக்கு, ஊக்கத்தொகையாக வழங்க, 2980 கோடி நிதியை நிதிக்கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது.

UIDAI, இந்தத் 100 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதை உறுதிப்படுத்த, வங்கிகளுடன் பேச்சு வர்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு செய்வதால், ஒதுக்கப்பட்ட மக்களும் வங்கிக் கணக்கு எண்ணைப் பெறுவார்கள். ஆதார் என்ற பெயருடன், கைரேகையை பிரதிபலிக்கும் வகையிலான அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டது. கண் விழித்திரை மற்றும் கைரேகை பதிவுகளும், குடிமக்களின் புள்ளி விபரத்திற்காக பெறப்படும். UIDAI துணை இயக்குனரான திரு ஆர். எஸ். சர்மா கூறும்போது, தொழில் காரணமாக கைரேகை முரடாக உள்ளவர்கள் மற்றும் கைரேகை முழுமையாக அமையாத குழந்தைகள் விஷயத்தில், விழித்திரை பதிவு பெரிதும் உதவும் என்றார். ஒவ்வொரு நபருக்கும், 10 விரல்களின் ரேகை, விழித்திரை பதிவு மற்றும் புகைப்படம் ஆகியவை, பயோமெட்ரிக் அளவீட்டிற்காக பெறப்படும்.

தற்போது UIDAI, ஆந்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் கொள்கை வரைவுகளை (Proof of Concepts - PoCs) சரிபார்த்து வருகிறது, இதன் மூலம், பரவலாக்கும் முன், சில வடிவமைப்புகள் பரிசோதன செய்யப்படும். ஒவ்வோரு நபரையும் பதிவு செய்ய தற்போது அரசுக்கு ரூ 31 செலவாகிறது. ஜூலை மாதத்திற்குள், பதிவு மற்றும் பயோமெட்ரிக் முறைகளை இறுதி செய்யும் கள ஆய்வுகளை முடித்து, முதல் அணி ஆதார் எண்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வெளியிட ஆணையம் முயல்கிறது.. முதல் அணி ஆதார் எண்களை பிப்ரவரி 2011 முதல் வெளியிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மூலம்: தி இக்கனாமிக் டைம்ஸ் (மும்பாய், ஏப்ரல் 27, 2010)




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: