குற்றங்களை இலவசமாக் பதிவு செய்ய பரிந்துரை

நாடெங்கும், குற்றங்களை இலவசமாக பதிவு செய்யுமாறு, காவல்துறை மறுசீரமைப்புக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. காவல்துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால், இந்தப் பரிந்துரை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. முல்லப்பள்ளி இராமச்சந்திரன் இதனை நாடாளுமன்றத்தில், ஏப்ரல் 28, 2010 அன்று தெரிவித்தார். இந்த கமிட்டியை மத்திய உள்துறை அமச்சகம் அமைத்திருந்தது.

பொதுத் தகவல் மையங்கள் மூலம் மின்ணணு முறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், காவல் நிலையங்கள் மற்றும் உயர் நிலை காவல் அலுவலகங்களையும் நவீனப்படுத்தவும் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தவும், ‘குற்றம் மற்றும் குற்றவாளிகளைத் தொடரும் இணையத் திட்டத்தை (Crime and Criminal Tracking Network System - CCTNS) உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம், குடிமக்களை மையப்படுத்தி சேவைகள் வழங்கும் முறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்: ப்ரஸ் இன்பர்மேஷன் பீரோ




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: