குடிமக்களுக்கான 600 சேவைகள் இணையத்தில் உள்ளன
14 மைய திட்டங்கள் நேரலை
NEGPயின் அடிப்படை குழு முன்னேற்றத்தை ஆய்வு செய்யும்
வெளியிடத் தயாராக இருக்கும் ஆயிரத்து நூறு குடிமக்கள் மற்றும் வணிகத்திற்கான மைய சேவைகளில் 600 சேவைகள் எப்பொழும் கிடைக்கும் வகையில் தற்பொழுது மிண்ணனுமயமாக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய மந்திரி சபையின் செயலர்.திரு.கே.எம்.சந்திரசேகர் அவர்கள் ஜீலை 16, 2010 அன்று தேசிய மிண்ணனு திட்டத்தின் அடிப்படை குழு மிண்ணனு அரசாங்க முறைகளை ஆய்வு செய்தபோது புதுதில்லியில் தெரிவித்தார். தேசிய மிண்ணனு திட்டத்தின் கீழ் 2006ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற முக்கிய திட்டங்கள் ஊரக இந்தியப்பகுதிகளில் சமுதாய –வணிக மாற்றத்தினை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் தங்களுடைய நிலங்கள் பற்றிய ஆவணங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கான வேலை அட்டை, பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி, இருப்பிடம் போன்றவை குறித்த சான்றிதழ்களை இணையம் வாயிலாக பெறமுடியும். பல்வேறு சமுதாய சேவைகளான பல்வேறு விதமான ஓய்வூதியங்கள் அதாவது விதவை, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள், கல்விக்கான உதவித்தொகை, போன்றவை மிண்ணனு வழியில் வழங்கப்படும். இது போன்ற இதர சேவைகளும் அதாவது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், விவசாய விலைபொருட்களின் சந்தை விலை நிலவரங்கள், தொலைபேசி வழி மருத்துவம், நோய்கள் கண்டுபிடுப்பு போன்ற சேவைகளும் மின்ணனுமயமாக்கப்பட்டுள்ளன.
தேசிய மின்ணனுமயமாக்கல் திட்டத்தின் அடிப்படைக்குழு மத்திய மந்திரி சபையின் செயலர் தலைமையில் ஜூலை 16, 2010 அன்று கூடியது. தனிநபர் அடையாள எண் வழங்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு.நந்தன் நில்கேனி, திரு.சாம் பிட்ரோடா, தகவல் துறை, உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான பிரதம மந்திரியின் ஆலோசகர், NASSCOM தலைவர் திரு.சாம் மிட்டல், NASSCOM முன்னாள் தலைவர் திரு.கிரண் கர்நாயக் போன்றோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள தடைகளையும் அவற்றை களைந்து இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்தும் விதம் குறித்தும் கலந்தாலோசித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 27 திட்டங்களில் 14 திட்டங்கள் மூலம் சேவைகள் அளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயாராக உள்ளன. அவை நடமாடும் கணினி உபயோக முறைகள், ஓய்வூதியம், மத்திய வரி, வருமான வரி, பாஸ்போர்ட், வங்கி மற்றும் காப்பீடு, நில ஆவணங்கள், சாலை போக்குவரத்து, பொது சேவை மையம், மிண்ணனு நீதிமன்றம், தேசிய பட்டுவாடா நுழைவு வாயில், இந்தியா போர்ட்டல். எல்லா திட்டங்களும் அவற்றின் மிண்ணனு சேவைகளை 2014 ஆம் ஆண்டு வாக்கில் செயல்படுத்தத்தொடங்கும். இந்த எல்லாத்திட்டங்களின் கீழ் 1100 சேவைகள் 2014 ஆண்டுக்குள் படிப்படியாக மக்களுக்கு அளிக்கப்படும்.
இதனை செயல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் மாநில அளவிலான அகன்ட 2 Mbps அளவிலான வலைத்தளங்கள் ஒவ்வொரு பிளாக் அளவில் வைக்கப்பட உள்ளன. இவை 23 மாநிலங்களில் செயல்முறையில் உள்ளன. எஞ்சிய மாநிலங்களில் மார்ச் 2011 வாக்கில் செயல்படத் துவங்கும்.
மாநில தகவல் மையம், மாநில அளவில் தகவல் சேகரிப்பு மையமாக செயல்படும். இந்த மாநில தகவல் மையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை 31 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஏல செயல்முறைகள் 16 மாநிலங்களில் முடிந்துவிட்டன. எல்லா 31 மாநில தகவல் மையங்களும் டிசம்பர் 2011ம் ஆண்டு வாக்கில் செயல்படத் துவங்கும்.
நாடு முழுவதும் 80000 CSCக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை மார்ச் 2011 வாக்கில் ஒரு லட்சத்தினை தாண்டக்கூடும். அரசாங்கம் 2012 ஆண்டு வாக்கில் இவற்றின் எண்ணிக்கையினை 2.5 லட்சங்களாக அதிகரித்து எல்லா பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தி மக்களுக்கு மிண்ணனு சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய மிண்ணனு திட்டத்தின் கூட்டத்தில் தற்பொழுது இத்திட்டத்தின் முன்னேற்றங்களை ஆலோசித்ததுடன் இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள தடைகளைப் பற்றியும் ஆலோசித்து சில பரிந்துரைகளை கூறியுள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்த போதுமான மனித வள மேம்பாட்டு குழுக்களை நியமிக்க பரிந்துரைத்துள்ளது. நீண்ட காலம் தரமாக இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தனிப்பட்ட ஒரு செயல்முறையினை உருவாக்கவும் இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தினை மேலாண்மை செய்யவும், செயல்படுத்தவும் தனியார் செயல்பாட்டினை ஊக்குவித்து, ஆனால் திட்டத்தினை செயல்படுத்தும் கட்டுப்பாட்டினை அரசாங்கம் வசம் இருக்குமாறும் தேசிய மிண்ணனு அரசாங்க திட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கண்டறியப்பட்ட கட்டாயமான சேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது தேசிய மிண்ணனு திட்ட அடிப்படை குழுக்கூட்டத்தின் மற்றொரு பரிந்துரையாகும் என்று மத்திய மந்திரி சபை செயலர் தெரிவித்தார். மேற்கூறிய சேவைகள் விரைவில் மாற்றியமைக்கப்பட்டு, வணிக பொறியியல் செயல்முறைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் கண்டறியப்படும். மேற்கூறிய சேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்துவதற்கான திட்டவரைமுறை கட்டாயமாக அமைக்கப்படவேண்டும். மத்திய மந்திரி சபை செயலர் தெரிவிக்கும் போது மிண்ணனு அரசாங்கம் மூலம்அவருடைய அலுவலகம் தாள்கள் அற்ற அலுவலகமாக ஏப்ரல் 1. 2010லிருந்து மாறிவிடும் என்று தெரிவித்தார்.
ஆதாரம்: Press Information Bureau


