இந்திய தனி நபர் அடையாள அமைப்பு பயிற்சியளிக்கும் நிறுவனங்களின் பட்டியலை தேர்ந்தெடுத்து தன்னுடன் இணைத்துள்ளது
இந்திய தனி நபர் அடையாள எண் அமைப்பு நிறுவனம் அதில் பதிவு செய்யும் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பதினைந்து பயிற்சி நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. இந்த தனி நபர் அடையாள எண் வழங்கும் நிறுவனத்தில் பதிவு செய்து பணியாற்றும் நிறுவனங்கள் மக்கள் தொகை மற்றும் குடிமக்களின் உயிர் அளவு போன்ற தகவல்களை சேகரித்து அத்தகவல்களை தனிநபர் அடையாள எண் வழங்கும் நிறுவனத்தின் மைய தகவல் நிலையத்திற்கு அனுப்பி குடிமக்களை பதிவு செய்து அதாவது ஆதார் எனப்படும் தனிநபர் அடையாள எண் நிறுவனத்தின் 12 எண் அடையாள எண்ணை அவர்களுக்கு வழங்கும்.
தனிநபர் அடையாள எண் வழங்கும் நிறுவனத்தின் துணை பொது அதிகாரி திரு.ஆர்.எஸ்.சர்மா அவர்கள் தெரிவிக்கும்போது ‘எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து எங்களுக்காக பணியாற்றவேண்டுமெனில் எங்களுக்காக பணியாற்றும் நபர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் தகவல்களின் தரமானதாகவும் சரியானதாகவும் இருக்க தொழில் நுட்ப திறமைகளுடன் கூடிய மென் திறமைகளும் தேவை. இதற்காக எங்களுடன் இணைந்து பணியாற்ற சில வரைமுறைகளை வகுத்துள்ளது. எனவே எங்களுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு அவர்களுடைய வேலைத்திறமை பற்றிய அறிவுக்கான சான்றிதழ் இணைக்கப்படவேண்டும். இந்த பதிவு செய்யும் நபர்கள் இணைய தள வாயிலான தேர்வுகளை எழுத வேண்டும். இத்தேர்வு மூலமாக இந்நிறுவனத்திற்காக வேலை செய்யும் நபர்களின் திறமையினை மதிப்பீடு செய்ய இயலும்.
தனிநபர் அடையாள எண் வழங்கும் நிறுவனம், அதில் பணியாற்றும் நபர்களுக்கு பயிற்சியினை கட்டாயமாக்கவில்லை என்றாலும் அதில் வேலை செய்ய பதிவு செய்துள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ள நிறுவனங்களை அந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப திறன்களை வைத்து தேர்ந்தெடுக்கிறது. தனி நபர் அடையாள எண் வழங்கும் நிறுவனத்திற்காக பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்கள் அகில இந்திய PTU DEP சங்கம், அப்டெக் நிறுவனம், சி-டாக், கவேலியர் இந்தியா, எவர்ஒன் எஜூகேசன் நிறுவனம், இசிட், சிஎம்சி லிமிடெட், ஹீரோ மைண்ட்மைன் நிலையம், இந்தியா கேன் எஜூகேசன் தனியார் நிறுவனம், மணிப்பால் கே12 எஜூகேசன் நிறுவனம், மணிப்பால் எஜூகேசன், நிட் லிமிடெட், டாடா இன்டர்ஆக்டிவ் சிஸ்டம்ஸ், DOEACC சொசைட்டி மற்றும் கிரக்ஸ் மேனேஜ்மென்ட் போன்றவை.
‘எங்களிடம் எங்களுக்காக வேலை செய்ய பதிவு செய்துள்ள நபர்கள் மற்றும் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் மூலம் தங்களுடைய அலுவலர்களின் மென் திறன்களை வளர்த்துகொள்ளலாம்’ என்று திரு.சர்மா தெரிவித்தார்.
ஆதாரம்: Press Information Bureau


