நடப்பு தகவல்

மிக விரைவில் கணினி மயமாகும் தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்துக்கள்

        தமிழக அரசாங்கம் தனது இ-பஞ்சாயத்து நிகழ்ச்சியின் கீழ் மேலும் 19 முக்கிய பஞ்சாயத்துகளை இணைத்துள்ளது. இதன் நோக்கம், மக்களுக்கு மின்னனுவியல் சார்ந்த அறிவினை ஊட்டுவதாகும்.
        அரசாங்கமானது, ரூபாய் 8.31 கோடியை, வரவு செலவு திட்டத்தின் கீழ் 475 கிராமங்களை தேர்வு செய்துள்ளது. இந்த இ பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் மக்களுக்கு அந்தந்த கிராம பஞ்சாயத்தின் தகவலை பெறலாம்.  அரசாங்கமானது கிராமங்களுக்கானஅடிப்படை தகவல்களை சேகரித்து வருகிறது.  பஞ்சாயத்து ராஜ் செயல் திட்டத்தை தயாரிப்பதற்கும் இந்த திட்டம் உதவி புரியும். மேலும் வேளான்மை வருமானம், தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, கல்வி, உடல்நலம் மற்றும் குடும்ப நல்வாழ்வு, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம், மின் வசதி, பொது வினியோக முறை, சுயஉதவி ஆகிய துறைகளுக்கான மேலாண்மை தகவல்களையும் அளிக்கும்.  மேலும் இ-பஞ்சாயத்தானது விண்ணப்ப படிவங்கள் பெறவும், நகராட்சி உரிமை ஆவணத்திற்கான தகவல்களை பெறவும் மற்றும் பல சட்டம் மற்றும் அரசாங்க கடடடளைகளைப் பெறவும் பஞ்சாயத்துவடிவம் அரசாங்க நிகழ்ச்சிகள் மேம்பாட்டு வேலைகள் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபத்தின் நிலை குறைகளுக்கான பதிவு, வரவு செலவு கணக்கு மற்றும் முக்கிய இணையதளங்களுக்கான இணைப்பு ஆகியவற்றையும் இ-பஞ்சாயத்தின் மூலம் பெறலாம். இதில், மேலும் பிறப்பு இறப்பு பற்றிய தகவல்கள், வீட்டுவரி வணிக உரிமம், ஓய்வூதிய திட்டம், நில ஆவணங்கள், திருமணபதிவு ஆகியவற்றையும் பெறலாம்.



கோயம்புத்தூரில் வரவேற்பு பெறும் கணினி மூலம் கட்டணம் செலுத்தும் வசதி

        இந்திய  கோயம்புத்தூர் கழகம் (ICC), கணினி மூலம் நேரடியாக வரியை செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பில் தொகையை கணினி மூலம் கட்டுவதற்காக, சில வங்கிகளுடன் இணைந்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை, பல கலந்தாலோசனைகளை பெறவும் மற்றும் தீர்வு காணவும்,  இ-கேஷ் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.  இதனால், நோயாளிகள் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.  ஸ்டேட் பேங்க்  ஆப் இந்தியாவின் டெபிட் கார்டுக்கான சிறப்பு பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது.  கோயம்புத்தூர் கழகம் கிரெடிட் கார்டு மூலம் கட்டப்படும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.  மேலும், கழகமானது, தனது இணைப்பை மேம்படுத்தும் வகையில் கூடுதல் சர்வரையும் அமைத்துள்ளது.  இதனால், மேலும் 20 வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில், வரிகளை செலுத்தலாம். வரி செலுத்துவதற்கு, இ-ரெமிட்டன்ஸ் கேட்வே, பெரும் உதவியாக இருக்கும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.



தமிழ்நாட்டு கிராமங்களுக்கு, கணினி அரசாங்கத்தை எடுத்து செல்லும் எரிக்ஸன் நிறுவனம்.

எரிக்ஸன்  நிறுவனமாது, சென்னைக்கு 60 கீ.மீ தொலைவிலுள்ள வடுகம்பாடி என்னும் கிராமத்தில் ‘‘கிராம ஜோதி ரூரல் பிராட்பேன்ட் திட்டத்தை’’ துவங்கியுள்ளது. தொழில்நுட்ப நன்மைகளை, கிராமப்புற இந்தியாவில் அறிமுகப்படுத்துவதோடு அங்குள்ள சமூகத்தை அதிவேக இணையதள சேவைகளுடன் இணைப்பதாகும்.  கிராம ஜோதி திட்டத்தின் கீழ்வரும் கிராமங்கள், தொலை மருத்துவம், இ-கல்வி, கணினி அரசாங்கம் போன்ற அகன்ற அலை பயன்களை பெறலாம்.
        எரிக்ஸன்  நிறுவனம், அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தொலை மருத்துவச்சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம், சென்னையில் இருந்து கொண்டே, மருத்துவர்கள் கிராமங்களில் உள்ள நோயாளிகளை பரிசோதனை செய்யலாம்.  எல்லா வசதிகளும் கொண்ட நடமாடும் மருத்துவ ஊர்தி கிராமங்களில் சேவை புரியும்.  அரசு இல்லா பிற நிறுவனங்களின் உதவியுடன், நடமாடும் சமூக மையங்களின் முலம் பதிவுக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் பெற்று அதை மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.  எரிக்ஸன்  நிறுவனம், ஒன்-97 என்ற நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகள் பயிர்களின் விலையை அறிய வழி வகுத்துள்ளது.  மேலும், இதன் மூலம், விவசாயிகள், உள்ளுர் வானிலை, விதை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கான தகவல்களை அறியலாம்.



குடிமக்கள் சேவைக்கான வலைதளம் - மும்பை நகராட்சி அறிமுகம்

மும்பை நகராட்சி கழகமானது. மும்பை வாழ் மக்களுக்காக. தனி குடிமக்கள் வலைதளம் தொடங்கியுள்ளது. சீமென்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் நாலேட்ஜ்வர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் தோழமையாக இந்த  முகவைகள் செயல்படுகின்றது. இதனால். இந்த முகவைகளால். மிகவும் சிறந்த வகையில். தீர்வுகள். ஆலோசனைகள் மற்றும் சேவைகளை மும்பை வாழ் மக்களுக்கு புரிய முடிகிறது. மேலும் அரசாங்கத்திலிருந்து மக்களுக்கும் மற்றும் அரசாங்கத்திலிருந்து வணிகர்களுக்குமான நன்மைகளை ஒளிவுமறைவு இல்லாமல் கிடைக்கச் செய்கிறது. மேலும் இந்த முகவைகள் குடிமக்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளை. பூர்த்தி செய்கிறது. இந்த முகவைகளில் விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பித்தல், பாதுகாக்கப்பட்ட பணம் கட்டுதல், கணினி மூலமாக குறைகளை பதிவு செய்தல், சொத்து வரி மற்றும் நீர் வரி கட்டுவது ஆகியவற்றை புரியலாம்.



காகிதம் அற்ற அலுவலகங்களாக மாறும் கர்நாடக அலுவலகங்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து. கர்நாடக அரசாங்கமானது காகிதம் அற்ற அலுவலகம் எனும் கருத்துப்படிவத்தை IT மற்றும் BT துறைகளில் தொடங்க உள்ளது. இந்த கருத்தப்படிவமானது IT/BT துறைகளில் சோதனை திட்டமாக துவங்கி பின்னால், மற்ற துறைகளுக்கும் விரிவாக்கப்படும்.
மாநிலத்தின் கணினி அரசாங்கமானது மைக்ரேசாப்ட் நிறுவனத்துடன் MoU கையெழுத்திட்டுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனமானது. தன் நிறுவனத்தின் மென்பொருளை, கர்நாடக அரசாங்கம் உபயோகிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.  இதற்கு முன்னர். இந்நிறுவனமானது. பொறியியல் மாணவர்களுக்கு உயர்கல்வியை அளிப்பதற்கான MoU ஐ கர்நாடகாஸ் போர்ட் பார் இன்பர்ஷன் டெக்னாலஜி எஜிகேஷன் ஸ்டண்டர்டஸ் உடன் கையெழுத்திட்டுள்ளது.     
இந்த ஒப்புதல் மூலம். இறுதியாண்டு மற்றும் முன்றாமாண்டு கணினி மற்றும் தகவல் அறிவியலில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கும்  மற்றும் இறுதியாண்டு   விசிகி மாணவர்களுக்கும். ஏழ மாத பயிற்சி திட்டத்தை நடத்தி வருகிறது.  அக்டோபர் 2007ல் தொடங்கும் இந்த திட்டத்தின் கீழ், ஙிமிஜிணிஷி ல் உள்ள உறுப்பினர் கல்லுாரியில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்கள், மைக்ரோ சாப்ட் ஸ்டுடண்ட் பார்ட்னர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினையும் பெறலாம்.



கிராமங்களில் கணினி மையங்களை (இ-ஹல்லி) தொடங்க இருக்கும் கர்நாடக அரசாங்கம்.

கர்நாடக அரசாங்கமானது, மிக விரைவில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்காக தகவல்களை அளிக்கும் விதத்தில் இ-ஹல்லி என்னும் கணினி அரசாங்க திட்டத்தை கிராமங்களில் தொடங்க உள்ளது.  இந்த இ-ஹல்லி மையங்கள், மாநிலத்திலுள்ள 5628 கிராம பஞ்சாயத்துகளிலும் தொடங்கப்படும்.  இந்த மையங்கள், பலவகையான தகவல்களை கிராமப்புற மக்களுக்கு வழங்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் வழிகாட்டப்பட்ட இந்த திட்டமானது, நவம்பர் மாதம் தொடங்கப்படும்.  அரசாங்கமானது இந்த திட்டத்தை, கிராமங்கள், நகரங்களுக்கு நிகராக வரவேண்டும் என்ற நோக்கத்துடன் கிராமங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.  இந்த திட்டத்தின் முதல் நிலையில், பின்வரும் 10 மாவட்டங்களில் மையங்கள் நிறுவப்படும் தாவன்கரே, சித்ரதுர்கா, ஷிமோகா, சிக்மங்கலூர், ஹவேரி, கடக் தார்வாத், பெல்காம், கொப்பல் மற்றும் பெல்லாரி. யாஷாஷ்வினி.  நகர ஹக் கிராமின அபிவிருத்தி பரிஷத் என்ற தாவன்கிரியில் இருக்கும் அரசுசாரா நிறுவனமானது, இந்த மையங்களை நிறுவுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.  இந்த அரசு சாரா நிறுவனம், தாவன்கிரி மாவட்டத்தில் ஏற்கனவே 5 மையங்களை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளது.  கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டுக்கழகம், இந்த மையங்களை நிறுவுவதற்காக, “அசரே” என்னும் திட்டத்தின் கீழ், ரூபாய் 35,000த்தை சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு வழங்கும்.  இந்த இ-ஹல்லி மையங்கள் பலவிதமான சேவைகள் மற்றும், மத்திய மற்றும் மாநில அரசாங்க துறைகளில் தகவலை மக்களுக்கு அளிக்ககூடியதாக இருக்கும்.  ேமலும் கிராமபஞ்சாயத்து வங்கிகள், மருத்துவமனைகள், இரத்த வங்கிகள், பரிசோதனை மையங்கள், கால்நடை மையங்கள், சந்தை விலை, வேளான் பண்ணை, வணிகம், கல்வி நிறுவனங்கள், பேரூந்து புகைவண்டி மற்றும் விமானம் பற்றிய நேரங்கள் மற்றும் கட்டணம் ஆகியவற்றிற்கான தகவல்களையும் அளிக்கும்.



கணினி அரசாங்கத்திற்கான “ஏஜிடி” விருதை வென்ற கர்நாடக மாநிலம்

கர்நாடக அரசாங்கத்தின் கணினி அரசாங்க திட்டமான, நெம்மாடி, ஆசியாவின் பிரிமியர் கவர்மன்ட் டெக்னாலஜி விருதை வென்றுள்ளது. நெம்மாடி திட்டமானது, கிராமப்புற கர்நாடகாவில் வசிக்கம் குடிமக்களுக்காக மற்றும் என்ற சேவைகளை அளிப்பதற்காக தொடங்கப்பட்டதாகும். கிராமப்புற சேவையை மையமாகக் கொண்ட இந்த நெம்மாடி திட்டமானது 14 நாடுகளின் 212 திட்டத்துடன் போட்டியிட்டு, தாய்லாந்திலுள்ள புக்கட் என்னும் ஊரில் நடந்த கவர்மென்ட் டெக்னாலஜி விருது வழங்கும் விழாவில் விருதை வென்றது. மேலும் ஒரு திட்டமான, பெங்களுர்ஒன் எனும் கர்நாடக கணினி அரசாங்க திட்டம், புதுடெல்லயில் நடந்த மைக்ரோசாப்ட் இ கவர்னன்ஸ் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளது.



மிகச்சிறந்த கணினியில் அரசு செய்யப்பட்ட மாநிலத்திற்கான விருதை குஜராத் வென்றது.

கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியாவின், 42வது கூட்டமைப்பில், 2006 - 2007க்கான மிகச்சிறந்த கணினியால் அரசு செய்யப்பட்ட மாநிலத்திற்கான விருதை, குஜராத்  மாநிலம் பெற்றது. குஜராத், நான்கு வகைக்கான விருதை வென்றுள்ளது. அவையாவன, மிகச்சிறந்த கணினி-மாநிலம், மிகச்சிறந்த கணினியால் நிர்வகிக்கப்பட்ட துறை (உடல்நலம் மற்றும் குடும்ப நலம்), மிகச்சிறந்த நிறைவேற்றப்பட்ட G2B திட்டம் மற்றும் VAT தகவல் திட்டமாகும்.
இந்த கூட்டமைப்பு விழாவில், கோவா, ஜார்ஜ்கண்ட் மற்றும் கேரளா மாநிலங்கள், வளர்ந்து வரும் கணினி அரசாங்க மாநிலங்களுக்கான விருதை கூட்டாக வென்றது. மேலும், மத்தியப்பிரதேச மாநிலத்தின், G2C கணினி திட்டமான குழந்தை தகவல் திட்டமும் விருதை வென்றது. அடிப்படை வசதி மற்றும் வசதிகள் மேலான்மை திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆவணங்களை கிடைக்க வழி செய்யும் திட்டமான சமாதன் ஏக் தின் மே என்ற திட்டம் முதல் ரன்னர்அப் விருதை வென்றது. கேரள அரசாங்கத்தின், தொழில் கல்விக்கான சேர்க்கை முறையிலான பொது ஒதுக்கீடு திட்டமும், சிறந்த கணினி திட்டமான G2G/G2GE திட்டமும் விருதை வென்றது. சிறந்த வலைத்தளம் சார்ந்த இரயில் முன் பதிவுக்கான விருதை IRCTC யும், சிறந்த PESO கணினி திட்டத்திற்கான ரன்னர்அப் விருதை நாக்பூரூம் வென்றது.



அசாம் மாநிலத்தில், கணினி அரசாங்க தொடக்கத்திற்கான நிதியை கிஞிஙி வழங்குகின்றது.

அசாம் மாநிலத்தில், புதுமையான தொலைதொடர்பு சார்ந்த திறமைகளை கொண்டு கணினி அரசாங்கம் தொடங்குவதற்காக புதிய தொழில் நுட்பங்களை வழங்குவதற்காக, ஆசிய மேம்பாட்டு வங்கி முடிவு செய்துள்ளது.
500000 டாலர்கள் மதிப்புள்ள தொழில் நுணுக்க உதவிகளை ADB வங்கிக்கு, தி ரிபப்ளிக் ஆப் கொரியா, இ ஆசியா மற்றும் நாலேட்ஜ் பாாட்னர்ஷிப்பண்ட் என்னும் நிறுவனமும் வழங்கியுள்ளது. இந்த தொழில் நுட்பங்களுக்கான உதவி, நவம்பர் 2007லிருந்து ஆகஸ்ட் 2008க்குள் தொடங்கப்படும். இந்த இ ஆசியா திட்டத்தின் முக்கிய நோக்கமானது, வளரும் உறுப்பினர் நாடுகளுக்கு தொழில் நுணுக்கங்களை வழங்குவதாகும். இதன் மூலம் தொழில் நுட்பமான டிஜிட்டல் டிலைட் குறைந்து விடும். அகன்ற அலை வலைதளம் மற்றும் கம்பியற்ற வலைதளம் போன்ற தொழில் நுட்பங்கள் கணினி கிராமப்புற மேம்பாட்டு செயல்முறைகளை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்துவனவாகும்.
இந்த தொழில் நுணுக்க உதவி மூலம், டிஸ்பூரில், டிஜிட்டல் டிலைட் குறைத்து அஸாம் மாநில அகல பரப்பு வலைதளம் விரிவாக்கப்பட்டு, கணினி அரசாங்கத்திற்கான சேவையை புரியும். இத்திட்டத்தின் கீழ், கிராமபுறங்களுக்கான வேளான்மை, நில ஆவணங்கள் கிடைக்கப் பெறலாம்



பஞ்சாப் பொதுப்பணித்துறை ஜனவரி 2008லிருந்து கணினி ஒப்பந்தபுள்ளி அறிவிப்பை தொடங்கும்

பஞ்சாப் பொதுப்பணித்துறை, தனது துறையின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாக  இருக்க வேண்டும் என்ற நோக்கில் கணினி மூலம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை மற்றும் தேவையான பொருள்களை வாங்குவது என்னும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை ஜனவரி 2008லிருந்து தொடங்க முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறை, தனது முதல் கட்ட திட்டத்தில், பஞ்சாப் பொதுப்பணித் துறையை கணினி மயமாக்கியது. இந்த திட்டம் ஜூன் 2008க்குள் முடிவடைந்து விடும். இந்த கணினி மயமாக்குதலில், வேலை மேலாண்மை, நிதி மேலாண்மை, பனியாளர் மேலாண்மை, அலுவலக தான்இயக்கம், தகவல் தெரிவித்தல் மற்றும் கோப்பு கண்காணித்தல் ஆகியவன அடங்கும். மேலும் நிமிஷி சார்ந்த, சாலை தகவல் திட்டம் மற்றும் சாலை சொத்து மேலாண்மை அடங்கும். ேமலும் பஞ்சாப் அரசாங்கமானது, பொது மக்களுக்கு சேவை அளிப்பதற்கான மாநில அகன்ற பரப்பு வலை சேவை, மாநில தகவல் மையம் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட கூடாரங்கள் ஆகியவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.



வணிக முகவைகளை தொடங்கவிருக்கும் இந்தியன் ரெயில்வே

கணினி மூலம் போக்குவரத்து சார்ந்த தகவல்கள் அளிப்பதோடு மட்டுமில்லாமல் எல்லா வணிக பரிவர்த்தனைகளையும் (பார்சல் சேவைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பொருட்கள் ஏலம்) மிக விரைவில் கணினி மூலமாக, இந்தியன் ரெயில்வே செயல்படுத்த இருக்கிறது..
        இந்த செயல்முறையில், சத்தியம், விப்ரோ மற்றும் ஹச்.சி.எல் போன்ற நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டியுள்ளது. இந்த முகவைகள் ரெயில்வே நிறுவனத்திற்கு, போக்குவரத்து மற்றும் வணிகம் செய்வதற்கு நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ேபால் உதவிபுரியும். மத்திய ரெயில்வே தகவல் திட்டம் (CRIS) இந்த முகவையை தயார் செய்து கொண்டு வருகிறது.



திறமைகளை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் தொடங்கப்படவுள் வலைதளங்கள்

இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது யுனைடெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோக்ரமுடன் (UNDP) இணைந்து ஸ்கில்ஸ் அண்ட் நாலேடஜ் பார் இம்ப்ரூட் லைவ்லிஉறிட்ஸ் அண்ட் லிவிங் ஸ்டாண்டர்ட்ஸ் (SKILLS) எண்னும் திட்டத்திற்கான தளத்தை (www.skillindia.com) தொடங்கியுள்ளது. இந்த தளத்தை 2007, அக்டோபர் 18ல், ஸ்ரீ.கபில் சிபால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் குமாரி செலிஜா, வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஓழிப்பு துறை மாநில அமைச்சர், இருவரும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் நோக்கமானது, வளர்ந்துவரும் தொழில்நுட்ப திறமைகளை, வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய பாடத்திட்டத்தை மேம்படுத்துவதாகும். இந்த திட்டத்தை, பின்வரும் கல்வி நிறுவனங்களில், அரசாங்கமானது செயல்படுத்தும். திருச்சிராப்பள்ளி ரீஜினல் இன்ஞினியரிங் காலேஜ் அறிவியல் மற்றும் தொழீல் நுட்ப என்ட்ரபொனர்ஸ் பார்க், திருச்சி விவேகானந்தா இன்ஸ்டிடீயூட் ஆப் பயோடெக்னாலஜி, நிம்பித், அகடமி ஆப் டெக்னிக்கல் எஜூகேஷன் - சயின்ஸ் மற்றும் டெக்னாவஜி என்ட்ரபுரனர்ஸ் பார்க், நொய்டா மற்றும் ஆக்னல் டெக்னிகல் எஜூகேஷன் காம்ளக்ஸ், கோவா.

இந்த கணினி முகவைகள், பயிற்சியாளர் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் இருவரும் பார்க்க கூடிய தேவையான தகவல்களை சேமித்து வைத்துக் கொண்டதாக இருக்கும். இந்த முகவைகள், ஒரு வாஸ்தவமான வேலை வாய்ப்பு அலுவலகமாக திகழும்


மின்னாட்சி சேவைக்காக ஏழு விருதுகளை தமிழ்நாடு பெற்றது

சென்னை, நவம்பர் 13ல், மாநில தொழில் நுட்ப செயலர், விவேக் ஹரி நரேன், தமிழ்நாடு ஏழாவது தேசிய கணினி அரசாங்க கருத்தரங்கில் அறிவிக்கப்பட்ட 40 விருதுகளில், ஏழினை தமிழ்நாடு பெற்றுள்ளதாக கூறினார். இந்த போட்டிகளில் மாநில அரசானது முதல் முறையாக கலந்து கொண்டது. முன்னர், அரசாங்க நிறுவனம் மற்றும் குடியியல் அமைப்புகளிலிருந்து பலவகையில் ஆன விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் சிறந்த கணினி அரசாங்கம், சிறந்த வலைதளம் மற்றும் சிறந்த  கருத்துப்படிவம் ஆகியவை அடங்கும். இந்த போட்டிக்கு, 150க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததாக றிமி.சூவ்ரதன், கூடுதல் செயலர், நிர்வாக சீர்அமைப்பு மற்றும்பொது மக்கள் குறை, இந்திய அரசு கூறினார். மிகச்சிறந்த கணினி அரசாங்கத்திற்கான தொடக்கத்திற்கான முதலிடத்தை மகராஷ்ட்ரா மற்றும் ஆந்திரபிரதேசம் பகிர்ந்து கொண்டது. மகராஷ்ட்ராவின் பப்ளிக் பிரைவேட் பார்டிசிபேஷன் அன்ட் எக்ஸ்பிரிமென்ட் இன் ரிஜிஸ்ரேஷன் எனும் திட்டமும் 2வது இடத்தைப் பெற்றது.  தமிழ்நாட்டின் அட்மினிஸ்ட்ரேஷன் தி கீ  பார் இ கவர்னன்ஸ் இனிஷயேட்டிவ் பார் கிரியேட்டிவ் பேப்பர்லெஸ் ஆபிஸ் மற்றும் கோயம்புத்தூர் நகராட்சி கழகத்தில் கணினி அரசாங்கம் என்னும் திட்டமும் தகுதிச் சான்றிதழை பெற்றது. 
வலைதளங்களில், மகராஷ்டிரா அரசாங்கத்தின் www.maharashtra.gov.in என்னும் வலைதளம் மிகச்சிறந்த  வளைதளத்திற்கான விருதைப் பெற்றது.  வருமானவரி துறையின், வலைதளமான www.incometaxindia.gov.in 2வது இடத்தையும் டெல்லி அரசாங்கத்தின் delhigovt.nic.in வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. தமிழ்நாட்டின் வலைதளமான www.teaserve.com குறிப்பிட்டுக் கூறப்பட்டது.
பி.கே.முகந்தி, எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், சென்டர் பார் குட்கவர்னன்ஸ் த்ரூ பெர்பாமன்ஸ் மேனேஜ்மென்ட், தங்க ஐகானை வென்றது. அஜய் ஸ்ரீ.வத்ஸா, பாரின் டிரேட், வணிகவியல் மத்திய அமைச்சர் எழுதிய ரெகுலேட்டர் டூ பெசிலிடேட்டர்” -DGFT ரெனிவல் டூ EDI, ரீஇன்ஞினியரிங் அண்ட் ஸட்ரேடஜிக் ஸ்டண்டர்டைசேஷன் என்னும் படைப்புக்கு வெள்ளி ஐகானும் கிடைத்தது. மேலும் பிரகாஷ்குமார், சிறப்பு செயலர், டெல்லி அரசு தொழில் நுட்பத்துறை வெண்கல ஐகானை தனது வலைதளம் சார்ந்த ஒபப்ந்தபுள்ளி அறிவிப்புக்கான முறைக்கு பெற்றார்.
தமிழ்நாட்டின் மருந்துப்பொருள் சேவை கழகத்தின் மருந்துப் பொருள் விநியோக மேலாண்மை முறை தகுதிச் சான்றிதழைப் பெற்றத,
தகவல் -
http://www.hinduonnet.com/thehindu/2003/11/14/stories/2003111405990400.htm



ஊரக வளர்ச்சி நிகழ்வுகளில் இணைய நிர்வாகம்

ஊரக வளர்ச்சி அலுவலகம், தனது செயல்திட்டங்களை அமல்படுத்துவதற்காக வள்ாந்து வரும் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை உபயோகிக்க முயற்சி எடுத்து வருகிறது.

அமைச்சரகத்தின் வலை தளம், அனைத்துப் பயனாளிகளும் எளிதாக அணுகும் முறையில், ஊரக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய பொதுவான தகவல்களையும், குறிப்பாக அமைச்சரகம் பற்றிய தகவல்களையும் தருகிறது. ஊரக வளர்ச்சித் துறையில், மத்திய அரசின் திட்டங்களின் அமலாக்கங்களை கண்காணிக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கணினி வழியாக மாதாந்திர நிதி அறிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான அறிக்கைகள் பெரும் முறை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நிலப் பத்திரங்களை தகவல் திரட்டுகளாக உருவாக்கும் நோக்கத்துடனும், பதிவு உரிமையை கணினி நகல்களாக நிலச் சொந்தக்காரர்களுக்குத் தரும் வகையிலும் நிலப்பத்திரங்களை கணினி மயமாக்கும் திட்டத்தையும் அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. நிலப்பத்திரங்களை கணினி மயமாக்கவும், இதர இணைய நிர்வாகத் தொடக்கங்களுக்காகவும், ஊரக வளர்ச்சி அமைச்சரகம் 2005 - 2006 நிதியாண்டில் 102 கோடிரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.



மலப்புரம் (கேரளா) இந்தியாவின் முதல் இணைய கல்வியறிவு
பெற்றமாவட்டமானது

கேரளாவுக்கு மேலும் ஒரு பெருமை. கேரளா தனது மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் ஒன்றான மலப்புரத்தை இந்தியாவின் முதல் இணைய கல்வியறிவு பெற்ற மாவட்டமாக மாற்றியுள்ளது. உலகிலேயே மிகப்பாிெய கிராமப்புர தகவல் தொட்ாபு இணையகம் கொண்டு இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்துவது, பிறப்புச் சான்றிதழ் பெறுவது போன்ற வேலைகளை, நீண்ட தூர பேருந்துப் பிரயாணம் மற்றும் கவுன்டர்களில் காத்திருக்கும் சிரமம் இல்லாமல் மின்னஞ்சல் மூலமாகவே செய்துகொள்ள முடியும்.

மாநில அரசாங்கம், இவ்வகை இணையம் வழி கட்டணத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை நியமித்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களை தகவல் சாவடி மூலமோ அல்லது அக்ஷயா மையங்களிலிருந்தோ தொடர்புகொள்ளலாம். மலப்புரத்தில் குடியிருப்பவர்கள், காவல் துறைக்கான தங்கள் புகார்களை அக்ஷயா மையத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாகவே பதிவு செய்யலாம்.






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: