கைப்பேசி: தகவல் சேர்ப்பு ஊடகமாக முன்னேறி வருகிறது

கைப்பேசிகள், இன்றைய நிலையில், பேச்சு மற்றும் எழுத்துவடிவ செய்திகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் இல்லை. நகரங்களில் மற்றும் ஊரக பகுதிகளில் வசிப்பவருக்கும் இடையே நிலவும் தகவல் தொடர்பு வேறுபாட்டை களைவதில் ஒரு வலிமையான தொழில்நுட்பமாக இது அறியப்படுகிறது. மின்னணு தொடர்பு, மின்சார பற்றாக்குறை, மற்றும் குறைந்த படிப்பறிவு போன்ற தடைகளை கடந்து, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குள் கைபேசிகள் குக்கிராமங்களையும் சென்று அடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரிடை மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை இது உருவாக்கியிருக்கிறது

இதனுடைய முன்னேற்றத்தின் இரண்டாவது கட்டமாக, பலவிதமான சேவைகளை அளிக்கும் ஊடகமாக இது அறியப்படுகிறது. ஒருவர் தங்களுடைய கைப்பேசியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை வேறொரு கணக்கிற்கு மாற்றமுடியும். ஒரு சராசரி குடிமகனுக்கு, குடியுரிமை மற்றும் வணிகச் சேவைகளை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகள் கைப்பேசிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் வணிக அடிப்படையிலான வங்கிகள், கைப்பேசி வழியாக வங்கிச் சேவைகளை அளிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அமைச்சகங்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட “கைப்பேசி வழியான நிதிச் சேவைகளை அளிப்பதற்கான செயல்முறை அடிப்படைக்கான (Framework for delivering financial services through mobile phone)” அனுமதியை இந்திய அரசாங்கம் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் தலைமுறை கைப்பேசி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியப் பிறகு (2010 – ன் இறுதியில் பரவலாக கிடைக்கக் கூடிய சேவையாக இருக்கும்), பயனாளிகள் தங்களுடைய கைப்பேசி மூலமாக உடல்நலம், கல்வி, வேளாண்மை, தகவலளிப்பு சம்மந்தப்பட்ட சேவைகளை பெற இயலும்.

இந்தியாவில் எம்-ஆளுமை
 
புதியவை என்ன?
 
 
கைப்பேசி மூலமாக, நிதிச் சேவைகளை பயன்படுத்தும் ஏழை மக்கள் (கைப்பேசி மூலமாக



Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: