சட்டத் துறையில் இணைய நிர்வாகம்
இந்திய உச்சநீதி மன்றத்தில் இணையவழியில் வழக்குத் தாக்கல் |
2006, அக்டோபர் 2ஆம் தேதி, இந்திய உச்ச நீதி மன்றம் இணைய வழியில்
வழக்கு தாக்கல் செய்யும் வசதியை ஆரம்பித்தது. இந்த முறையில் மக்கள்
தங்களுடைய வழக்குகளை இணையதளம் மூலமாக எங்கிருந்தும், எப்போது
வேண்டுமானாலும் தாக்கல் செய்ய இது வழிவகுக்கிறது. இந்த சேவையை இதில் பதிவு
செய்துகொண்ட எந்தத் தனி நபரும் பயன்படுத்திக்கொள்ளலாம் |
தீர்ப்பு தகவல் அமைப்பு |
தீர்ப்புகள் குறித்த தகவல் அமைப்பு முறையில் இந்திய உச்ச நீதி மன்றம் மற்றும் பல்வேறு உயர்நீதி மன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் அடங்கியுள்ளன. உச்ச நீதி மன்றத்தைப் பொருத்தவரையில், அது ஆரம்பிக்கப்பட்ட 1950லிருந்து இன்றுவரை அறிவிக்கப்பட்டு, எஸ் சி ஆர் இதழில் வெளியிடப்பட்ட அனைத்துத் தீர்ப்புகளும் இந்த தகவல் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. 1993 வரை எஸ்சிஆர் இதழில் வெளியிடப்பட்ட தீர்ப்புகளின் சாராம்சங்களும் இடம் பெற்றுள்ளன. |
|
வழக்கு நிலவர இணையதளத்தில் உச்ச நீதி மன்றம் அல்லது நாட்டின் எந்த ஒரு
உயர் நீதி மன்றத்திலும் விசாரிக்கப்படும் வழக்குகளின் தற்போதைய நிலவரம்,
அதாவது அது நிலுவையில் உள்ளதா? |
|
|
உச்ச நீதி மன்றத்தில் அல்லது அனைத்து உயர் நீதி மன்றங்களில் அல்லது
அவற்றின் பெஞ்சுகளில் அடுத்தநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
வழக்குகள் நாள்தோறும், வாரம்தோறும் வெளியிடப்படும் பட்டியல் என்பதுதான்
பட்டியலிடப்படும் வழக்குகள் எனப்படும். |
|
|
இந்த சேவையைப் பயன்படுத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரும் வழக்கறிஞர்களும் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளின் நிலவரம் குறித்து இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் முறை மூலம் தொலைபேசி வாயிலாக கட்டணம் இல்லாமல் அறிந்துகொள்ள முடியும். தொலைபேசி எண்கள் : 011-4362062, 4360112. |
|
|
சேவைகள்: |
|
இந்திய நீதிமன்றங்கள் |
‘இந்திய நீதிமன்றங்கள்’ என்பது உச்ச நீதி மன்றம் நாட்டில் உள்ள அனைத்து 21 உயர் நீதி மன்றங்கள் மற்றும் அவற்றின் பெஞ்சுகள் குறித்த இணைய தளங்களின் தொகுப்பு ஆகும். உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களின் இணைய தளங்களில் தீர்ப்புகள், பட்டியலிடப்பட்ட வழக்குகள், வழக்கு நிலவரங்கள் ஆகியவற்றுடன் வரலாறு, நீதிமன்ற வரம்பு, விதிமுறைகள், கடந்த கால மற்றும் தற்போதைய நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. |


