Document Actions


தேசிய இணைய நிர்வாகத் திட்டம்

இந்திய அரசாங்கத்தின் தேசிய இணைய நிர்வாகத் திட்டம், நாட்டில் இணைய நிர்வாகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஆதரவளித்து அடித்தளம் அமைத்துத்தர முயல்கிறது. சரியான நிர்வாகம், நிறுவன ரீதியான ஏற்பாடுகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் கொள்கைகளையும் உருவாக்க இத்திட்டம் முயல்கிறது. அத்துடன், மக்களையும், வர்த்தகத்தையும் மையமாகக் கொண்ட சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை நிலைகளில் குறிப்பான திட்டங்களை அமல்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய இணைய நிர்வாகத் திட்டத்தின் நோக்கம்
அரசின் எல்லா சேவைத்திட்டங்களும், பட்டிதொட்டிகளில் வசிக்கும் சாதாரண மனிதனுக்கும், அவன் வசிக்கும் கிராமத்திலேயே, அதுவும் எளிதாகவும், வெளிப்படையாகவும் கிடைக்கும்படி செய்தல்.


நிர்வாகத்தின் முக்கியத்துவம்
  • இணைய நிர்வாகத்தால் குடிமக்களுக்கு அளிக்கப்படும் அரசின் சேவைகளின் தரத்தை மேம்படுத்த இயலும். குடிமக்களுக்குத் தகவல் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும். தகவல்களை தெரிவிப்பதன் மூலமாக, அரசாங்கத்தில் அவர்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும், பொருளாதார மற்றும் சமுதாய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். 
  • தகவல் தொடர்பு தொழில்நுட்பம், பழைய நிறுவன அமைப்புகளில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும். ஒரு திறமையான இணைய நிர்வாகம் உருவாகிடதகவல்களை தெரிந்து, பங்கேற்கிற குடிமக்களின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. நிறுவன மாற்றத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் தாக்கம், சமூகம் மற்றும் அரசியல் எல்லைகளைத் தாண்டி வேகமாகப் பரவும்.
  • இணைய நிர்வாகம், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசு மற்றும் பொதுமக்களிடையே சேவைகள்,  தகவல்கள் மற்றும் செய்திப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது. மேலும் அரசாங்கம்-குடிமக்கள் மற்றும் அரசாங்கம்-வர்த்தகம் இடையே காணப்படும் பல்வேறு தனித்து நிற்கிற முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் பயன்படுகிறது. மேலும் அரசாங்கக் கட்டமைப்புக்குள்ளே உள்ள நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் தகவல் தொடர்பு தொழிற்நுட்பத்தை பயன்படுகிறது.
  • அரசுப் பணியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள். இதன் நோக்கம், தொழில்நுட்பம் மூலமாக இயக்கப்படும் நிர்வாகத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதே.


இணைய நிர்வாகம் அடைய முயல்வது

1. திறன்மிக்க நிர்வாகம்

2. வெளிப்படையான நிர்வாகம்

3. குடிமக்களின் பங்கேற்பு



தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் இணைய நிர்வாகத்தை செயல்படுத்துவதால் பெறப்படும் நன்மைகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் இணைய நிர்வாகத்தை செயல்படுத்துவதால் பெறப்படும் நன்மைகள்

1. சரியான நிர்வாகம்

2. நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு

3. குடிமக்களின் விழிப்புணர்வு மற்றும் உரிமை

4. குடிமக்களின் நலன்

5. ஜனநாயகம்

6. நாட்டின் பொருளாதார வளர்ச்சி



இணைய நிர்வாகத்தின் குறிப்பிட்ட நோக்கம்

1. பணிகளைச் செயல்படுத்தும் அமைப்பினை மேம்படுத்துவதில் அதிக கவனம்

2. உற்பத்தித் திறனை உயர்த்துதல்

3. தகவல்களைப் பெறுவதற்கான விரிவான அமைப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்.



மாநில அளவிலான பெரும்பரப்பு வலையமைப்பு (ஸ்வான்)

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றிய அளவில் 2 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்துடன் செயல்படக்கூடிய இணைய தொடர்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட, இந்திய அரசின் திட்டம்தான் இந்த மாநில அளவிலான, பெரும்பரப்பு வலையமைப்பு (ஸ்வான்). இது நாட்டின் 7442 இருப்பு மையங்களை (பிஓபி PoP - பாய்ன்ட் ஆப் பிரசன்ஸ்) இணைக்கிறது. ஒன்றிய அளவில் ஏற்படுத்தப்பட்ட இம்மையங்கள், கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம், கிராம அளவில் இணைப்பை ஏற்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளன. மார்ச் 2005-இல் 3,334 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் தேசிய இணைய நிர்வாகத் திட்டத்தின் (NeGP) கீழ் தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டு இடைவெளியில், இத்திட்டத்தை 2010 ஆம் ஆண்டிற்குள், இந்தியா முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்வான் (SWAN) பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.



குறிப்பிட்ட குறிக்கோளுக்கான திட்டம்  (Mission Mode Project)


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: