வேலை வாய்ப்பு அலுவலகத்துடன் ஆன்லைன் பதிவு
பயன்கள்
- உங்களுடைய பெயர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு விடும்
- வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து உங்களுக்கு தனிஎண் வழங்கப்படும்.
- எப்பொழுதெல்லாம் உங்கள் தகுதி, மற்றும் படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அரசு அலுவலகங்களில் ஏற்படுகிறதோ, அப்பொழுது உங்களின் விண்ணப்பம் அந்த அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.
பதிவு செய்யும் முறை
- நீங்களே பதிவு செய்வதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வலைதளத்தின் உள் நுழையவும்
- வேலை வாய்ப்பு அலுவலகத்தின் வலைதளத்தில் உள்ள, மாநிலம், மாவட்டம், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பெயரை தேர்வு செய்யவும்
- கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் கோட் - ஐ(code) டைப் செய்யவும்
- பின்பு Submit பட்டனை அழுத்தவும்.
- இவ்வாறு பதிவு செய்த பின்னர், உங்களுக்கான பயனாளர் பெயர், இரகசிய சொல், கொடுக்கப்பட்ட பதிவு எண், பதிவு தேதி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பெயர் ஆகியவற்றை பெறலாம்.
- இதனை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும் (பின்னர் உபயோகிப்பதற்கு) , பிரிண்ட் செய்வதற்கான இணைப்பு, வலது பக்க அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும்.
- கொடுக்கப்பட்ட பதிவு எண் தற்காலிகமானது.
- இவ்வாறு பதிவு செய்த 15 தினங்களுக்குள், படிப்பு, அனுபவம், ஜாதி, விளையாட்டு, ஊனமுற்றோர் (மருத்துவ கழகம் வழங்கிய), முன்னாள் இரானுவ வீரர், விதவை, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் குடியிருப்பு சான்று ஆகிய சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று காண்பிக்கவும்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தவிர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள
ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை குடியிருப்புச் சான்றாக காட்ட வேண்டும்.
- குடும்ப அட்டை
- வாக்காளர் அட்டை
- மஞ்சள் அட்டை
- முனிசிபல் கவுன்சிலர் இடம் இருந்து சான்றிதழ்
- பெற்றோரின் வேலைக்கானச் சான்று (யாராவது ஒருவரின்)
- மாநிலத்தில் படித்ததற்கான சான்றிதழ்
- பள்ளி தலைவர் அல்லது கெசடட் அலுவலரிடமிருந்து கடிதம்
- MLA / MP - யிடமிருந்து சான்று
- குடியுரிமை சான்றிதழ்
- இறுதியாக, வேலைவாய்ப்பு அலுவலகம், பதிவு எண், புதுப்பிக்கபட வேண்டிய தேதி ஆகியவற்றுடன், வேலை வாய்ப்பு அட்டையை அளிக்கும்
உங்கள் அருகாமையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் பதிவதற்கு இங்கே கிளிக் செய்யவும்


