|
|
இணையதளம் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல்
-
- விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய
அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான
ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
- நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
|
|
-
- எவரொருவர் பாஸ்போர்ட் பெறுவதற்கு தகுதியானவராக இருக்கிறாரோ அவர்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவார்.
- பாஸ்போர்ட் அலுவலகங்கள் அமைந்திருக்கும் அதிகார எல்லையின் கீழ்
குடியிருப்பவர்கள் மட்டுமே இந்த இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள் ஆவார்கள்.
- தற்பொழுது, இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கான வசதி விண்ணப்பங்கள்
இந்த நகரங்களில் மட்டும் உள்ளது
|
அஹ்மதாபாத்
|
அம்ரிட்சர்
|
பெங்களுரு
|
|
பரேய்ல்லி
|
போபால்
|
புவனேஸ்வர்
|
|
சண்டிகார்
|
சென்னை
|
கொச்சின்
|
|
கோயமுத்தூர்
|
டெஹ்ராடூன்
|
டெல்லி
|
|
காஜியாபாத்
|
கோவா
|
குவஹாத்தி
|
|
ஹைதராபாத்
|
ஜெய்ப்பூர்
|
ஜலந்தர்
|
|
ஜம்மு
|
கொல்கத்தா
|
கோழிகோடு
|
|
லக்னோ
|
மதுரை
|
மலப்புரம்
|
|
மும்பை
|
நாக்பூர்
|
பாட்னா
|
|
பூனே
|
ராய்பூர்
|
ராஞ்சி
|
|
சிம்லா
|
ஸ்ரீநகர்
|
சூரத்
|
|
தானே
|
திருச்சி
|
திருவனந்தபுரம்
|
|
விசாகபட்டினம்
|
|
|
|
|
-
- புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு (இதற்கு முன் உங்களுக்கு பாஸ்போர்ட்
இல்லாதபட்சத்தில்)
- மறுமுறை பாஸ்போர்ட் வழங்குவதற்கு (10 வருட கால அவகாசம் உள்ள
பாஸ்போர்ட் முடிந்தபின்பு அல்லது பாஸ்போர்ட் முடிவதற்கு 12 மாத கால
அவசாகம் இருக்கும்பொழுது),
- பாஸ்போர்ட்-ன் நகல் வழங்குவதற்கு (தற்பொழுது இருக்கும் உங்களுடைய
பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் )
|
|
-
- இருப்பிடச் சான்று
- பிறந்த தேதிக்கான சான்று
- தேவையான கட்டணம் ( ரொக்கமாக அல்லது காசோலையாக)
- பாஸ்போர்ட் அளவு கொண்ட வண்ணப் புகைப்படம்
|
|
-
- எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக வட்டார பாஸ்போர்ட்
அலுவலகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். -passport.gov.in
,
- பதிவு செய்தப்பிறகு, உங்கள் விண்ணப்ப படிவத்தை திறக்க / சேமிக்க கணினி
உங்களை கேட்கும்.
- திறந்த/சேமித்த பிறகு, தயவு செய்து விண்ணப்ப படிவத்தை பிரிண்ட்
எடுக்கவும்.
- ஏதாவது காரணமாக உங்களுடைய விண்ணப்ப படிவம் பிரிண்ட் செய்ய இயலாமல்
போனால், விண்ணப்பப்படிவத்தின் எண்ணை நீங்கள் கண்டிப்பாக குறித்துக்
கொள்ளுங்கள். இந்த விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியின் உதவியைக்
கொண்டு பின்னால் நீங்கள் விண்ணப்பப்படிவத்தை மறுமுறை பிரிண்ட் எடுக்க
முடியும்.
- நீங்கள் விண்ணப்ப படிவத்தை சேமித்து வைத்திருந்தால், மேலும் நீங்கள்
பிரிண்ட் எடுக்க முடியும்.
- விண்ணப்பப்படிவத்தில் உங்கள் கையால் மட்டுமே நிரப்ப வேண்டியிருக்கும்
நிரல்களும் இருக்கும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அதற்கு ஆதரவான ஆவணங்களான
பிறப்பு சான்றிதழ் மற்றும் கட்டணத்தோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு
திட்டமிட்ட சந்திப்பிற்கான தேதி மற்றும் நேரத்திற்கு நீங்கள் சென்று
சமர்ப்பிக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் கணினி திட்டமிட்ட தேதி மற்றும்
சந்திப்பிற்கான நேரத்தை உங்களுக்கு தெரிவிக்கும், இதுவும் விண்ணப்ப
படிவத்தில் பிரிண்ட் ஆகியிருக்கும்.
- தயவு செய்து பாஸ்போர்ட் அலுவலகத்தை திட்டமிட்ட தேதி மற்றும்
நேரத்திற்கு அடையுங்கள். வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கிட்டத்தட்ட 15
நிமிடங்களுக்கு முன்பாகவே கண்டிப்பாக வரவேண்டும் மற்றும் அதற்கென
இருக்கும் வாடிக்கையாளர் சேவை முகப்பிடத்தை அணுக வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டோக்கன்
எண் வாங்கவேண்டிய அவசியமில்லை. நீண்ட வரிசையில் நீங்கள் நின்று
காத்திருக்க வேண்டியதில்லை.
|
|
-
|
விண்ணப்பப்படிவத்தோடு விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது
காசோலையாகவோ அதற்குரிய பாஸ்போர்ட் அதிகாரி பெயரில் செலுத்தவேண்டும்.
காசோலையாக இருந்தால், விண்ணப்பதாரரின் முழுப்பெயர் மற்றும் விண்ணப்ப எண்ணை
காசோலையின் பின்புறம் எழுத வேண்டும். காசோலை கொடுக்கும் வங்கியின்
குறியீடு எண், காசோலை எண் மற்றும் காசோலை வங்கியிலிருந்து பெறப்பட்ட தேதி
ஆகியவைகள் குறிப்பிட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இருக்கும் அதற்குண்டான
பெட்டிகளில் செலுத்தும் கட்டணம் குறிப்பிடவேண்டும்.
|
வ. எண்
|
பொருள்
|
கட்டணங்கள்
|
|
1.
|
10 வருட கால அவகாசம் கொண்ட ( 36 பக்கங்கள் ) புதிய பாஸ்போர்ட்( 10 வருட
முழுவதும் செல்லத்தக்க பாஸ்போர்ட்-ஐ வாங்க விரும்புபவர்கள், 15 வருடங்கள்
முதல் 18 வருடங்களுக்கு இடைப்பட்ட வயதைக்கொண்ட சட்டப்படி வயது
முதிராதவர்கள் )
|
Rs 1,000/-
|
|
2.
|
10 வருட செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் ( 60 பக்கங்கள்)
|
Rs. 1,500/-
|
|
3.
|
சட்டப்படி வயதுக்கு முதிராதவர்களுக்கான 5 வருடங்கள் செல்லத்தக்க புதிய
பாஸ்போர்ட் அல்லது சட்டப்படி வயது முதிராதவர்கள் 18 வயது அடையும் வரை,
இதில் எது முந்துகிறது அது வரை
|
Rs 600/-
|
|
4.
|
பாஸ்போர்ட் தொலைந்துவிடுதல், சேதமடைதல் அல்லது திருடப்பட்ட நிலையில் (
36 பக்கங்களைக் கொண்டுள்ள ) பாஸ்போர்ட் நகல்
|
Rs. 2500/-
|
|
5.
|
பாஸ்போர்ட் தொலைத்துவிடுதல், சேதமடைதல் அல்லது திருடப்பட்ட நிலையில் (
60 பக்கங்களைக் கொண்டுள்ள ) பாஸ்போர்ட் நகல்
|
Rs. 3000/-
|
|
6.
|
காவல் அனுமதிக்கான சான்று / ஈசிஎன்ஆர் / கூடுதலான மேற்குறிப்புகள்
|
Rs.300/-
|
|
7.
|
முகவரி மாற்றம், பெயர்,பிறந்த தேதி,பிறந்த இடம்,தோற்றம்,கணவன் அல்லது
மனைவியின் பெயர், பெற்றோர்களின் பெயர்/சட்டப்படியான பாதுகாவலர்
ஆகியவைகளில் மாற்றம் ஏற்படும்பொழுது
|
Rs.1000/- [Fresh passport booklet will be
|
|
|
-
|
பயன்படத்தக்க பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக தட்கால் கட்டணம்
இருக்கிறது, இதை ரொக்கமாகவோ அல்லது வட்டாரத்தை சார்ந்த பாஸ்போர்ட் அதிகாரி
என்ற பெயரில் காசோலையாகவோ செலுத்தக்கூடியதாகும். தட்கால் பாஸ்போர்ட்-க்கான
கூடுதலான கட்டணம் சுழற்சிக்கு அப்பால் பின்வருமாறு இருக்கும்.
புதிய பாஸ்போர்ட்-க்காக
|
1.
|
விண்ணப்பித்த தேதியிலிருந்து 1-7 நாட்களுக்குள்
|
ரூபாய் 1500/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக ரூபாய் 1000/-
|
|
2.
|
விண்ணப்பித்த தேதியிலிருந்து 8-14 நாட்களுக்குள்
|
ரூபாய் 1000/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு கூடுதலாக ரூபாய் 1000/-
|
வேறொரு பாஸ்போர்ட் பெற ( பாஸ்போர்ட்
தொலைத்துவிடுதல்/சேதமடைதலுக்கு பதிலாக )
|
1.
|
விண்ணப்பித்த தேதியிலிருந்து 1-7 நாட்களுக்குள்
|
ரூபாய் 2500/- நகல் பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய்
2500/-
|
|
2.
|
விண்ணப்பித்த தேதியிலிருந்து 8-14 நாட்களுக்குள்
|
ரூபாய் 1500/- நகல் பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய்
1500/-
|
10 வருடங்கள் செல்லத்தக்கத்தான கால அவகாசம் முடிந்தப்
பின்னர் மறுமுறை பெறுவதற்கு
|
1.
|
விண்ணப்பித்த தேதியிலிருந்து 3 வேலைநாட்களுக்குள்
|
ரூபாய் 1000/- பாஸ்போர்ட் கட்டணத்திற்கு, கூடுதலாக ரூபாய் 1500/-
|
பாஸ்போர்ட்-க்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க இங்கு
கிளிக் செய்யவும் |
|
-
|
(1) கீழ் வரும் ஆவணங்களின் இரண்டு நகல்களை, புதிய பாஸ்போர்ட்
பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொழுது இணைக்க வேண்டும்.
|
|
-
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன், தட்கால் கட்டணம் மற்றும்
உண்மையென சான்றளிக்கும் விதமான முன்மாதிரியான இணைப்பு “எப்” பொதுவான
வாக்குமூலமாக இணைப்பு “ஐ” சமர்ப்பிக்கவேண்டும்.
- உண்மையென சான்று அளித்த அலுவலரிடமிருந்து பெறப்பட்டவை உறுதியளிக்கும்
சான்று தானா என்பதை உறுதியளிக்கும் விதமாக எழுத்து மூலம் சரிபார்க்கும்
உரிமையை பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி அதற்கான உரிமையை
தக்கவைத்துள்ளார்.
- வரிசைகிரமம் இல்லா பாஸ்போர்ட் வழங்குவதற்கு அவசர தேவைக்கான சான்று
தேவையில்லை.
- தட்கால் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த
காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும்
கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம்
தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர்
பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள
அட்டையாக இருக்க வேண்டும் அதோடு ( இணைப்பு “ஐ”) நிலையான எழுத்து வடிவ
வாக்குமூலத்தை பத்திர பதிவு முத்திரைத் தாள்களில் நோட்டரியால் மெய்யானது
என உறுதியளிக்க வேண்டும்.
- கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை
கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
- வாக்காளர் அடையாள அட்டை(எபிக்)
- மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை,
பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை
நிறுவனங்கள்
- தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
- சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டைகள்
- ஆயுதத்திற்கான உரிமங்கள்
- சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும்
பிற.
- குடும்ப அட்டைகள்
- ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/
ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின்
விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய
ஆணை
- இரயில்வே அடையாள அட்டைகள்
- வருமான வரி அடையாள (பான்) அட்டைகள்
- வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக புத்தகம்
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான
புகைப்பட அடையாள அட்டைகள்
- ஓட்டுனர் உரிமம்
- ஆர்பீடி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள்
- எரிவாயு இணைப்பிற்கான ரசீது
|
|
-
|
விண்ணப்ப படிவம்
எண்-1
புதிய/மறுமுறை வழங்கல்/தொலைத்துவிடுதல்/சேதமடையும் பாஸ்போர்ட்-க்கான
வேறொன்று/பெயர்/தோற்றம் மாற்றம் / பக்கங்கள் முடிவடைதல் போன்றவைக்காக இது
பயன்படுத்தப்படுகிறது. சட்டப்படி வயதுக்கு முதிராதவர்களுக்கான
பாஸ்போர்ட்-க்காக இதே விண்ணப்ப படிவம் பயன்படுத்தப்படுகிறது
விண்ணப்ப படிவம்
எண்-2
காவல் அனுமதி சான்றிதழுக்காக விண்ணப்பித்தல், ஈசிஆர் முத்திரை
நீக்குவதற்கு, கணவன் அல்லது மனைவியின் பெயர் சேர்ப்பதற்கு மற்றும் முகவரி
மாற்றத்திற்கு இதையே விண்ணப்பமாக பயன்படுத்தலாம். குறைவான காலத்திற்கு
செல்லத்தக்க பாஸ்போர்ட்டை, முழு காலத்திற்கும் செல்லத்தக்கதாக
புதுப்பிப்பதற்க்கும் இந்த படிவமே பயன்படுத்தப்படுகிறது.
தனிப்பட்டவரின்
விவரங்களுக்கான படிவம் (பிபி பாரம்)
காவல்துறை சரிப்பார்த்து தகவல் அளிப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
இது விண்ணப்ப படிவம் எண்-1 – ன் ஒரு பகுதியாகும். கடந்த ஒரு வருடத்தில்
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் குடியிருந்தவராக
இருந்திருக்கும் பட்சத்தில், பிபி படிவத்தின் கூடுதலான ஒன்றை ஓவ்வொரு
முகவரி/இடத்திற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
|
|
-
|
எழுத்தறிவில்லாத விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படவேண்டிய பிறந்த
தேதிக்கான எழுத்துவடிவ வாக்குமூலம் (இணைப்பு “எ”)
அடையாள சான்றிதல் ( இணைப்பு “பி” )
பெற்றோரில் எவராவது ஒருவர் ( தனியாக பிரிந்திருந்து ஆனால் முறையான
விவாகரத்து பெறாமல் அவர்கள் இருப்பது ) சட்டப்படி வயது முதிராத
சிறியவர்களின் பாஸ்போர்ட்-க்காக எழுத்துவடிவ வாக்குமூலம் தருவதற்கு
(இணைப்பு “சி”)
திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றத்திற்காக பெண் வின்னப்பதாரரின்
எழுத்துவடிவ வாக்குமூலம் (இணைப்பு “டீ”)
பெயர்/உரிமைப் பத்திரம்/எழுத்து வடிவ வாக்குறுதி வாக்குமூலத்தில்
மாற்றம் செய்வதற்கான (இணைப்பு “ஈ”)
தட்கால் பாஸ்போர்ட்-க்கான சரிப்பார்க்கும் சான்றிதழ் (இணைப்பு
“எப்”)
சட்டப்படி வயதுக்கு வராதவரின் பாஸ்போர்ட்-க்காக பெற்றோர் /
பாதுகாவலரின் உறுதிமொழி ( பெற்றோரில் எவராவது ஒருவர் ஒப்புதல் அளிக்காமல்
இருக்கும் பட்சத்தில் ) (இணைப்பு “ஜி” )
சட்டப்படி வயதுக்கு வராதவரின் பாஸ்போர்ட்-க்காக பெற்றோர் /
பாதுகாவலரின் உறுதிமொழி (இணைப்பு “எச்”)
பொதுவான எழுத்து வடிவ வாக்குமூலம் (இணைப்பு “ஐ”)
சான்றிதழ் சரிப்பார்த்தலுக்கான முன்மாதிரி இணைப்பு “ஜெ”
அனுமதிக் கடிதம்
பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள தயவுச் செய்து
passport.nic.in என்ற இணைய
தளத்திற்கு செல்லுங்கள்
|
|
|
|