|
|
ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க அழைப்பு
-
|
நிகழ்ச்சி நாள் : 04-05
ஆகஸ்ட், 2010
ஒருங்கிணைப்பாளர்:
சிஎஸ்டிஎம்எஸ் (CSDMS - அறிவியல், மேம்பாடு மற்றும் ஊடகவியலுக்கான
மையம்)
இடம் : ஹைதராபாத்
கருத்தரங்கத்தின் ஐந்து முக்கியத்
தலைப்புகள்:
- இந்தியாவில் மின்னாட்சி
- இந்தியாவில் மின்னணு வழிக் கற்றல்
- இந்தியாவில் இ-சுகாதாரம்
- இந்தியன் டெலிசென்டர் ஃபோரம்
- இந்தியாவில் இ-வேளாண்மை
முக்கிய தேதிகள்
- கருத்துச்சுருக்கம் சமர்ப்பிக்க கடைசி நாள் : மே 16, 2010
- கருத்துச் சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவிக்கும் நாள்: மே 20,
2010
- முழுகட்டுரையைச் சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10, 2010
- கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவிக்கும் நாள்: ஜூன் 21, 2010
மேலும் விவரங்களுக்கு இ-இந்தியா2010 இணையதளத்திற்குச் செல்லுங்கள்
|
|
-
|
தலைப்பு : மின்-ஆளுமை அரசின்
கூட்டுச்செயல்பாடு, அமைப்புமுறை மற்றும் உத்திகள்
முக்கிய தேதிகள்
- முழு கட்டுரை சமர்ப்பித்தல்: 30 ஜூலை 2010
- ஆசிரியருக்கு கட்டுரை ஏற்பு அறிவிப்பு: 30 செப்டம்பர் 2010
- ஏதேனும் திருத்தம் செய்ய: 15 நவம்பர் 2010
- இறுதியான ஏற்பு அறிவிப்பு: 15 டிசம்பர் 2010
- பதிப்பிக்கத்தக்க இறுதிவடிவ கட்டுரை சமர்ப்பித்தல்: 15 ஜனவரி
2011
- பதிப்பித்தல்: 15 ஏப்ரல் 2011
மேலும் விவரங்களுக்கு www.epractice.eu/en/blog/311012 இணையதளத்திற்குச்
செல்லுங்கள்:
|
|
-
|
இடம் : ஃப்ரெய்பெர்க்
ஜெர்மனி
தேதி : 26-28 ஜூலை 2010
கட்டுரைக்கான தலைப்புகள்
- குடிமக்கள்
- இணைய தொழில்நுட்பப் பயன்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு
- இணையவழி செயல்பாடுகளில் பங்குகொள்ளுதல்
- கிடைக்கச் செய்தல்
- சமுதாய பங்கெடுப்பை ஊக்குவித்தல்
- நிலைத்திருத்தல்
- இணையவழிக் ஆதரித்தல்
- தகவல் பரிமாற்றம்
- சமுதாய பங்களிப்பு மற்றும் உரிமையேற்பு
முக்கிய தேதிகள்:
- கட்டுரை சமர்ப்பிக்க கடைசிநாள் (முதல் அழைப்பு நீட்டிப்பு): 24 மே
2010
- ஆசிரியருக்கு கட்டுரை ஏற்பு அறிவிப்பு (முதல் அழைப்பு நீட்டிப்பு): 14
ஜூன் 2010
- பதிப்பிக்கத்தக்க கட்டுரை & முன்னதான பதிவு (முதல் அழைப்பு
நீட்டிப்பு): 30 ஜூன் 2010 வரை
- தாமதாமான பதிவு (முதல் அழைப்பு நீட்டிப்பு): 30 ஜூன் 2010
க்குப்பின்
- கருத்தரங்கம்: ஃப்ரெய்பெர்க் ஜெர்மனி, 26 – 28 ஜூலை 201
மேலும் விவரங்களுக்கு www.edemocracy-conf.org என்ற தளத்திற்கு செல்லுங்கள் அல்லது ஜூனியா தகவல்
மையத்திற்கு (ZUNIA Knowledge Exchange) செல்லுங்கள்
|
|
-
|
இடம்:சியோல், கொரிய
குடியரசு
19-21 ஜூலை 2010
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் அமைப்பு(UNSD), வணிகம் மற்றும்
மேம்பாட்டுக்கான ஐக்கியநாடுகளின் கூட்டமைப்பு (UNCTAD), சர்வதேச
தொலைத்தொடர்பு யூனியன் (ITU), கொரிய குடியரசின் புள்ளியியல் துறை ஆகிய
அமைப்புகள், மேம்பாட்டுக்காக தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம்
மேம்பாடு அடைவதை அளவிடும் பங்கமைப்புடன் சேர்ந்து, தகவல் தொடர்பு
தொழில்நுட்ப புள்ளிவிபரம் குறித்த சர்வதேச கருத்தரங்கை நடத்துகின்றன
முன்னுரை
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பற்றிய புள்ளிவிபரங்கள்
சமீபகாலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துவருவது, மக்களின் சமூக பொருளாதார
வாழ்வில் அதிக மாற்றத்தை ஏற்படுத்திவரும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய
நம்பகமான புள்ளிவிபரங்கள் அமையப்பெறுவதை வலியுறுத்துகிறது. துனிஷியாவில
நடைபெற்ற தகவல் சமுதாயம் பற்றிய உலக மாநாட்டுக்குப்பின் (WSIS), தகவல்
தொடர்புத் துறையின் (ICT) புள்ளிவிபரங்கள் தயாரிப்பில் அதிக முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது. அதே நேரம் வேகமாக மாற்றம் கண்டு வரும் தகவல் தொடர்புத்
துறையில் புள்ளியியல் கோட்பாடுகளும் வரையறைகளும் தொடர்ந்து
புதுப்பிக்கப்படவேண்டும். முதன்மை தகவல் சேகரிப்பாளராக இருப்பதால், தேசிய
புள்ளியியல் மையங்கள் நிலைத்திருக்கத்தக்க மற்றும் சர்வதேச அளவில்
ஒப்பிடத்தக்க வகையில் தகவல் தொடர்பு (ICT) பற்றிய புள்ளிவிபரம் அளிப்பதில்
முக்கியப் பங்காற்றுகின்றன
ஐசிடித் துறையின் புள்ளிவிபரங்களைத் தொகுப்பதில் ஏற்பட்டுள்ள புதிய
முன்னேற்றங்கள், தற்போதைய நிலை மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க கூடிய
வாய்ப்பை, புள்ளியியல் மையங்கள் மற்றும் அது சார்ந்த இதர
பிரிவினர்களுக்கும் இக்கருத்தரங்கம் ஏற்படுத்தி தந்துள்ளது. .
இக்கருத்தரங்கம், துனிஷியாவில் நடைபெற்ற தகவல் சமுதாயம் பற்றிய உலக மாநாடு
(WSIS), மற்றும் புத்தாயிரத்திற்கான மேம்பாட்டு இலக்குகளை (MDGs) அடைவதை
ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு செய்ய நிர்ணயித்துள்ள 2015 ஆம் ஆண்டு ஆகிய
இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படுகிறது. தகவல் சமுதாய
வளர்ச்சியை, புத்தாயிரத்திற்கான மேம்பாட்டு இலக்குகள் அடிப்படையில் இந்த
ஆய்வு நடத்தப்படவுள்ளது.
கருத்தரங்கில், குறிப்பாக கீழ்க்கண்ட பிரிவுகளில் அனுபவப் பகிர்வு
மற்றும் முன்னேற்றம் குறித்த விவாதங்கள் நடைபெறும்:
- தகவல் தொழில்நுட்ப புள்ளிவிபரம் மற்றும் கொள்கை உருவாக்குதல்
- கீழ்கண்டவை உட்பட, தகவல் சமுதாயத்தை அளவீடு செய்தல:
- கைப்பேசி மற்றும் அகண்ட அலைவரிசை தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள
புதிய முன்னேற்றங்கள்.
- வீடுகள் மற்றும் தனிமனித தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை
அளவிடுதல்
- குடும்ப அளவில் சர்வே செய்வதில் உள்ள அளவீட்டுச் சிக்கல்கள்
- கீழ்கண்டவை உட்பட, தகவல் சார்ந்த பொருளாதாரத்தை அளவிடுதல் :
- வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்தை
அளவிடுதல்.
- வணிகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை அளவிடுதல்.
- தொழில்நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை பற்றிய சர்வே
எடுப்பதில் உள்ள அளவீட்டுச் சிக்கல்கள்
கருத்தரங்கம் கீழ்கண்ட பிரிவுகளிலும் விவாதம் நடைபெறும்:
- கல்வி, மின்னாட்சி மற்றும் இணைய பயன்பாட்டில் பாதுகாப்பு உள்ளிட்ட
துறைகளில் தகவல் தொழில்நுட்ப த்தின் புள்ளிவிபரம் தகவல் தொழில்நுட்ப
புள்ளிவிபரங்கள் கிடைப்பதில், மண்டல மற்றும் சர்வதேச அளவில் கையாளவேண்டிய
அணுகுமுறைகள்
- இது பற்றி கொரியநாட்டின் அனுபவங்களை ஆய்வு செய்தல்
-
<
கருத்தரங்கில் யார் கலந்துகொள்ளலாம்?
தகவல் தொழில்நுட்ப அளவீட்டில் புள்ளிவிபரம் மற்றும் அதன் வழிமுறைகளில்
ஆர்வம் உள்ள நிபுணர்கள் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளலாம். குறிப்பாக,
தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சத்தின்
பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்துகொள்ள
அழைக்கப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து நிபுணர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர்.
கருத்தரங்கம் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும்.
|
|
-
|
மேற்கண்ட தலைப்புகளில் தகவல் தொழில்நுட்ப புள்ளியியலில் உங்கள்
நாட்டின் அனுபவங்கள் மற்றும் அங்கு எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து
தரமிக்க பங்களிப்பு கட்டுரைகளை சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கிறோம். இத்தகைய
கட்டுரைகள், சிறப்பு பேச்சாளர்களின் கட்டுரைகளுடன் இணைந்து,
பங்கேற்பாளர்களுக்கு முழுமையான பின்னணித் தகவல்களை அளிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றன.
- கட்டுரைகளை ஜூலை 14, 2010 க்குள் ICT-Seminar-2010@un.org என்ற
மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும்
- கட்டுரை சுருக்கத்தை(200 வார்த்தைகளுக்கு மிகாமல்) 2010, மே 10
தேதிக்குள் சமர்ப்பித்தல் கருத்தரங்கத்திற்கு கூடுதல் பேச்சாளர்களை அழைக்க
ஏதுவாக இருக்கும்.
பதிவு
பங்கேற்ப்புக்கான பதிவை, தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் நிரப்பி,
ICT-Seminar-2010@un.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.
சமர்பிக்கப்பட்ட கட்டுரை மற்றும் இடவசதியைப் பொறுத்து, பதிவு
உறுதிசெய்யப்படும்.
இந்நிகழ்ச்சியைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு http://unstats.un.org/unsd/ictஎன்ற
தளத்திற்கு வருகை தாருங்கள்.
|
|
-
|
நாள்: 24, மே - 4 ஜீன், 2010
இடம் : சர்வதேச கருத்தரங்க மையம் (HICC), ஹைதராபாத்,
இந்தியா
ஐந்தாவது உலக தொலைத்தொடர்பு மேம்பாட்டு மாநாடு (WTDC-10), இந்திய
அரசின் அழைப்பின்படி, மே 24 முதல் ஜூன் 4, 2010 வரை ஹைதராபாத்தில்
நடைபெறுகிறது. உறுப்பு நாடுகள் மற்றும் துறை ரீதியான அங்கத்தினர்களின்
பங்களிப்புடன் தொலைத்தொடர்புத் துறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப
வளர்ச்சிக்கான முக்கியத் தேவைகளை கண்டுபிடித்தல், அடுத்த 4 ஆண்டுகளில்
தொலைத்தொடர்பு வளர்ச்சியில் சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ITU)
மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ‘ஹைதராபாத் செயல் திட்டத்தை (HAP)”
உருவாக்குவது ஆகியவை, இக்கருத்தரங்கத்தின் நோக்கங்களாகும்.
2009 மற்றும் 2010 ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற மண்டல அளவிலான
தயாரிப்பு கூட்டங்கள் (RPM) மூலம், இம்மாநாட்டுக்கான மண்டல அளவிலான
உள்ளீடுகள் தயாரிக்கப்பட்டன. அரசுத்துறையினர், அமைச்சர்கள்,
பன்னாட்டுதூதர்கள், தனியார்த்துறை மற்றும் மண்டல மற்றும் சர்வதேச
அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இம்மாநாட்டில்
கலந்துகொள்கின்றனர்..
நோக்கம்
தொடர்ச்சியாக நடைபெற்ற பல மண்டல அளவிலான தயாரிப்பு கூட்டங்களின் (PM)
நிறைவாக நடைபெறும் இம்மாநாடு, 2006 தோகா மாநாட்டில் தொடங்கப்பட்ட
செயல்திட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதில்
முக்கிய பங்காற்றுகிறது. உலகளாவிய தகவல் சமூகத்திற்கான அடிப்படைக்
கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உத்திகள், செயல்திட்டங்கள், மற்றும்
கூட்டறிக்கையும் இம்மாநாட்டில் அறிவிக்கப்படும்.
நிகழ்ச்சியைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு - http://www.itu.int/ITU-D/conferences/wtdc/2010/index.htmlஎன்ற
இணையதளத்தைப் பாருங்கள்
|
|
|
|