குறிப்பிட்ட குறிக்கோளுக்கான திட்டம்

இந்திய அரசாங்கத்தினுடைய இணைய நிர்வாகத் திட்டம் (2003 - 2007) மூலமாக, இணைய நிர்வாகத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்க முயல்கிறது.  இத்திட்டம் சரியான நிர்வாகம், நிறுவன அமைப்பு, முக்கிய கட்டமைப்புகள் மற்றும் சாதகமான கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கி, குடிமக்களை மையமாக கொண்ட வர்த்தகத்தை ஏற்படுத்த பல மிஷன் மோட் திட்டங்களை மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை நிலையில் தொடங்குகிறது.

அடுத்த ஐந்து வருடங்களில், 23,000 கோடி மதிப்பீட்டில் 26 மிஷன் மோட் திட்டங்கள் மற்றும் 8 துணை அங்கங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.  அரசின் முக்கிய திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்ற அரசு  திட்டங்கள், இணைய நிர்வாக முறையிலேயே அமுலாக்கப்படும். மாநிலங்கள் தங்களுக்கு பொருந்திய குறிப்பிட்ட ஐந்து திட்டங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில், மொத்தம் 500 அமுலாக்க நிறுவனங்கள், 2 லட்சம் இடங்கள் மற்றும் 70,000 மனித வருட உழைப்பு சம்மந்தப்பட்டுள்ளது.

சில முக்கிய மிஷன் மோட் திட்டங்கள்

வரிசை எண் மிஷன் மோட் திட்டங்கள் தொடர்பான துறைகள்
மத்திய அரசாங்கம்
01 தேசிய குடிமகன் தகவல் திட்டம் உள்துறை அமைச்சரகம் / இந்திய அரசாங்க பொது பதிவாளர்
02 வங்கி நிர்வாகம் வங்கி நிர்வாகத் துறை
மாநில அரசாங்கம் (மாநிலங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டியவை)
03 நிலம் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை
04 விவசாயம் விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை
05 கிராம பஞ்சாயத்துகள் ஊராக வளர்ச்சித்துறை
ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள்
06 பொதுப்பணி சேவை மையங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை
07 இணைய நிர்வாக நுழைவாயில் தகவல் தொழில்நுட்பத் துறை

 




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: