‘ஜீடிஸ்’ நீதிமன்றத் தீர்ப்புகள்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர்நீதி மன்றங்களில் நடந்து முடிந்த வழக்குகளில் வெளியிடப்படக் கூடிய வழக்குகள் மற்றும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆகியன ஒருங்கே கிடைக்கும் ‘ஆன்லைன்’ நூலகம்தான் இந்த ஜீடிஸ்.

 இணைய தளத்தில் வழக்குப் பட்டியல்

நீதிமன்றங்கள் மறுநாள் கவனிக்க வேண்டிய வழக்குகளைப் பட்டியலிடும் முறையே "காஸ் லிஸ்ட்" (வழக்குப் பட்டியல்) என்பதாகும் (http://causelists.nic.in ). உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் "காஸ் லிஸ்ட்"க்ள் இணைய தளத்தில் தேசியத் தகவலறியும் மையத்தின் (என்.ஐ.ஸி.) கணினிச் சேவை மையங்களில் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம், 18 உயர் நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் 10 பெஞ்சுகள் ஆகியவை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், இவைகளின் தினசரி மற்றும் வாராந்திர "காஸ் லிஸ்ட்"கள் என்.ஐ.ஸி. மூலம் கிடைக்கின்றன. வழக்குப் பட்டியல் இல்லாமல் எந்த நீதிமன்றமும் செயல்பட முடியாது என்பதால், வழக்குப் பட்டியலை நீதிமன்றத்தின் முதுகெலும்பு என்றும் கூறலாம். எனவே, அனைத்து நீதிமன்றங்களாலும் உபயோகப்படுத்தப்படும் இன்றியமையாத ஒன்றாக வழக்குப் பட்டியல் ஆகிவிட்டது.

வழக்குப் பட்டியல் தயாரானவுடன் பெரும்பாலான நீதிமன்றங்கள் அதை "ஸைக்ளோஸ்டைல்" முறையின் மூலம் (ஆயிரக்கணக்கில்) நகலெடுக்கும் வேலையைத் தொடங்குகின்றன. இக்காரணத்தாலேயே, வழக்கறிஞர்களுக்கு அவரவர்களின் வீடு/அலுவலகங்களுக்கு வழக்குப் பட்டியலை அனுப்ப நீதிமன்றங்களுக்கு அதிகக் கால தாமதம் ஆகிறது.

அந்தந்த தினத்தின் வழக்குப் பட்டியலின் நகல்கள் வழக்கறிஞர்களுக்குப் பொதுவாக இரவு எட்டு மணிக்கு முன்னர் கிடைப்பதில்லை. சில உயர் நீதிமன்றங்கள் வழக்குப் பட்டியல் விவரங்களைக் ஃப்ளாப்பி மூலம் கணினியில் செலுத்தி ஆயிரக்கணக்கில் அச்சிட்ட நகல்களைப் பெறுகின்றன. இதன்மூலம் உயர் நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. வழக்குப் பட்டியல் விவரங்களை இணைய தளத்தில் கிடைக்கச் செய்வதால் உயர் நீதிமன்றங்களின் செலவு குறைகிறது. ஏனெனில், ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் தேசியத் தகவலறியும் ஆணையத்தின் இணைய தளச் சேவைகள் மற்றும் மென்பொருள்கள்தான் இதற்குப் பயன்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

* இவை இணையதளம் மூலம் அனைவருக்கும் கிடைக்கின்றன.
* அனைத்து உயர்நீதிமன்றங்களின் வழக்குப் பட்டியல்களும் http://causelists.nic.in என்னும் இணையதளச் சேவையில் கிடைக்கும்.
* வழக்கறிஞர்கள் தாங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் / கையாளும் வழக்குகளைப் பற்றிய வழக்குப் பட்டியலைத் தாங்களே தயாரித்துக்கொள்ளலாம்
* மனுதாரர் அல்லது எதிர் மனுதாரரின் பெயரின் மூலம் வழக்குகளைச் சுலபமாகத் தேடிவிட முடியும்.
* வேண்டுமானால், நீதிமன்ற வாரியான வழக்குப் பட்டியல்களையும் தயாரித்துக்கொள்ளலாம்
* அதேபோல், நீதிபதிகள் வாரியான வழக்குப் பட்டியல்களையும் தயாரித்துக்கொள்ளலாம்
* தேவைப்படும் பட்சத்தில், முழு வழக்குப் பட்டியலையும் அச்சிட்டுக்கொள்ளலாம்.
* வழக்கு எண் வாரியாகவும் வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

தாக்கம்

நீதிமன்ற வேலைநேரம் முடிந்த உடனேயே வழக்கறிஞர்களுக்கு வழக்குப் பட்டியல்கள் வழங்கப்பட்டுவிடுகின்றன. வழக்கறிஞர்கள் தங்களுக்குத் தொடர்புடைய வழக்குகளின் பட்டியலை மட்டும் தயாரிப்பதன் மூலம், தங்களது வழக்குகளின் நிலையை அறிய நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பார்க்கவேண்டிய வேலையும் இதன்மூலம் தவிர்க்கப் படுகிறது. வழக்கு விவரங்கள் இணையதளத்தில் கிடைக்கும் காரணத்தால், மனுதாரர்கள்/எதிர்மனுதாரர்கள் தங்களது வழக்கு எந்தத் தேதியில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று வழக்கறிஞர்களைக் கேட்காமலேயே சுலபமாக அறிந்துகொள்ள முடியும். பெரும்பாலான வழக்கறிஞர்கள் வழக்குப்பட்டியல் தேவைக்கு இணைய தளத்தையே நாடுவதால், வழக்குப் பட்டியல் தயாரிக்கும் வேலையைக்கூட அறவே கைவிட்டுவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் பணம் மிச்சமாகுமே என்று சில நீதிமன்றங்கள் யோசித்துக்கொண்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தைத் தவிர கீழ்க்கண்ட உயர் நீதிமன்றங்களின் வழக்குப் பட்டியல்களும் தேசியத் தகவலறியும் ஆணையத்தின் இணைய தளச் சேவை மையங்கள் மூலம் கிடைக்கின்றன:

1. உச்ச நீதிமன்றம் 2. அலஹாபாத் 3. ஆந்திரப் பிரதேசம் 4. பாம்பே (மும்பை) 5. கொல்கத்தா 6. சட்டீஸ்கர் 7. சென்னை 8. தில்லி 9. குஜராத் 10. கௌஹாத்தி 11. இமாச்சலப் பிரதேசம் 12. ஜபல்பூர் 13. ஜார்க்கண்ட் 14. ஜம்மு & காஷ்மீர் 15. ஜோத்பூர் 16. கர்நாடகா 17. கேரளா 18. பாட்னா 19. ஒரிஸ்ஸா 20. பஞ்சாப் & ஹரியானா 21. சிக்கிம் 22. உத்தராஞ்சல்




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: