|
தேவைப்படும் பொருட்கள்
1. மரத்தூண்கள்
மரத்தூண்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில்
பசுமையகத்தின் பலம் இத்தூண்களைப் பொருத்து அமையும். யூகலிப்டஸ் தூண்களில்
எறும்பு மற்றும் கரையான் தாக்கம் மிக மிக குறைவாக இருப்பதால், சவுக்கு
மரத்தை காட்டிலும் யூக்கலிப்டஸ் மரத்தை தேர்வு செய்யலாம். மேலும்
இம்மரங்கள் பலமாக இருப்பதால் ஆணி அடிக்கும் போது தோல் உறியாமல் நன்கு
இறங்குகிறது.
இரு அளவிலான மரத்தூண்களை உபேயாகிக்க வேண்டும். ஒன்று அதிமான (7 - 10
செ. மீ) விட்டம், மற்றொன்று 5 செ.மீ விட்டமாக இருக்க வேண்டும்.
கூரைப்பகுதிகளுக்கு பெரிய விட்ட தூண்களையும், ஏனைய பக்கபல
வடிகங்களுக்கு சிறிய அளவிலான தூண்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவைப்படும்
மரத்தூண்களின்
எண்ணிக்கை
பெரிய விட்டத்
தூண்கள்
- 21
சிறிய விட்டத்
தூண்கள்
- 34
மொத்த மரத்தூண்களின் எண்ணிக்கை
- 55
2. G.I.
ஒயர்
4 மிமீ விட்டம் உடைய ஜி.ஐ. ஒயர்கள் (மூங்கில்
குச்சிகளை கூரையுடன் இணைத்து கட்டுவதற்கு).
ஜி.ஐ. ஒயரின் மொத்த எடை : 2 கிலோ
3. ஆணிகள்
மரத்தூண்களை பக்க தூண்களுடன் இணைக்கவும், மரத்தூண்கள் இணைப்புகளில் ஆணி
அடிக்கவும் நீளமான ஆணிகள் தேவை.
7 செ.மீ நீளமுள்ள ஆணிகள் : 3
கிலோ
4. புற
ஊதா
கதிர்வீச்சை
தடுக்கும் குறையடர்த்தி
நெகிழி படலம்
(LDPE)
எந்த வகையான பசுமையகங்களுக்கும் மூடு பொருளாக இதனை பயன்படுத்திக்
கொள்ளலாம். குறையடர்த்தி நெகிழி படலங்களையே தற்பொழுது உலகளவில் எல்லா
பசுமையகத்திலும் பயன்படுத்துகின்றோம். மேலும் இவை குறைந்த
செலவுடையனதாகவும், அமைப்பதற்கு எளிமையாகவும் இருக்கும். இந்தியாவில்
குறையடர்த்தி நெகிழி படலத்தை (LDPE) இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
தயாரிக்கின்றது (IPCL). மரக்கட்டையிலான பசுமையகத்திற்கு மூடு பொருளாக
பயன்படுத்துவதற்கு இவை மிகவும் ஏற்றவையாகும்.
தேவைப்படும் மொத்த
படலத்தின் அளவு
தரையளவின் பரப்பளவை விட 2.48 மடங்கு அதிகமான அளவு LDPE தேவைப்படும்.
உதாரணமாக 35அடி x 20 அடி = 700 சதுர அடி பசுமையகம் அமைக்க 1736
சதுர அடி புறஊதா கதிர் தடுப்புத்திறன் கொண்ட படலம் தேவைப்படும். இதன்
எடை சுமார் 30 கிலோவாகவும், தடிமன் 200 மைக்ரானாகவும் இருக்க
வேண்டும்.
6. நிலக்கரி
தார் /
பிட்டுமின் - 2 லிட்டர்
7. LDPE சுருள்
(10 செ. மீ
தடிமன்)
சாதாரண குறையடர்த்தி நெகிழி படலம் (10 செ.மீ) கொண்டு மரத்தூண்கள்,
இணைப்புகள், ஒயர்கள் ஆகியற்றை மூடி, அவை புறஊதா கதிர் தடுப்பான்
குறையடர்த்தி நெகிழி படலத்துடன் நேரடியாக படுவதை தடுக்க முடியும்.
தேவைப்படும் மொத்த அளவு - 3 கிலோ
8. பிளாஸ்டிக்
கயிறு
வேகமான காற்று விசையிலிருந்து காப்பதற்காக, LDPE படலங்களை
கட்டமைப்புகளுடன் இணைத்து கட்டுவதற்கு பிளாஸ்டிக் கயறுகள்
பயன்படுகின்றன.
தேவைப்படும் பிளாஸ்டிக் கயிற்றின் அளவு - 5 கிலோ
9. மூங்கில்
குச்சிகள்
குறையடர்த்தி நெகிழி படலங்களை விரிப்பதற்கு எளிதாக இருப்பதற்காக மேலும்
கீழுமாக கட்டுவதற்கு மூங்கில் குச்சிகள் தேவைப்படுகிறது.
தேவைப்படும் மூங்கில் குச்சியின் அளவு - 30 கிலோ
10. கோர்ப்பு
ஆணிகள்
ரப்பர் வாஷருடன் சேர்த்து, LDPE படலங்களை மரக்கட்டமைப்பில் இணைக்க
கோர்ப்பு ஆணிகள் பயன்படுகிறது.
- படலங்களை மரத்தூண்களுடன் சேர்த்து சீராக
பொருத்துவதற்கு இந்த ஆணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- தேவைப்படும் கோர்ப்பு ஆணிகள் அளவு (1 இஞ்ச்
நீளம்) - 250 கிராம்
|