தேசிய தோட்டக்கலைத் திட்டம்

எட்டு வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் உட்பட), ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுகிறது. மேற்கூறிய இத்திட்டம் செயல்படாத மாநிலங்களில், மற்றொரு திட்டமான வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசு தேசிய தோட்டக்கலைத் திட்டத்தை தனது பத்தாவது ஆண்டு திட்டத்தில் (2005/06) துவங்கி, இயக்கி வருகிறது.  தோட்டக்கலைத் துறையில் வளர்ச்சியைப் பெருக்கி, உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும். 11வது ஆண்டு திட்டத்தில், மத்திய அரசு 85%மும் மாநில அரசு 15% மும் நிதியுதவி செய்யவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் http://www.nhm.nic.in/ தளத்தை காணவும்.

 
 

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: