தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்(இராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா (RKVY))
வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில், பதினோறாவது ஐந்தாண்டு
திட்டத்தில், 4% வளர்ச்சியை அடைய வேண்டும், என்பதே RKVY-யின் (தேசிய
வேளாண் வளர்ச்சித் திட்டம்) நோக்கமாகும்.
-
- வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு அதிக முதலீடு செய்ய மாநிலத்தை
வலியுறுத்துதல்.
- வேளாண் துறைச் சார்ந்த திட்டங்களை வகுப்பது மற்றும்
செயல்படுத்துவதற்க்கான தன்னாட்சியை மாநில அரசுக்கு வழங்குவது.
- வேளாண் சார்ந்த திட்டத்தை மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலத்திற்கு
தயார் செய்வது.
- முக்கியமான பயிர்களில் விளைச்சல் இடைவெளியைக் குறைப்பது.
- விவசாயிகளுக்கு அதிக லாபம் கிட்ட செய்தல்
- வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்த முறையில்
அணுகுதல்.
|
|
-
- இது ஒரு மாநிலத் திட்ட ஒதுக்கீடின் படி வரையறுக்கப்படும்
திட்டமாகும
- மாநில அரசு, வேளாண் மற்றும் அதைச்சார்ந்த துறைக்கான திட்ட செலவை
அதிகரித்தல் மூலம், RKVY-ல் இடம் பெறும் தகுதியினை
பெருகிறது.
- மாநில அரசின் முந்தைய வருடத்திற்கு முன்பான மூன்று வருட திட்ட
செலவினத்தின் சராசரியே ஒப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் அளவீடாகும
- மாநிலம் மற்றும் மாவட்ட வேளாண் திட்டத்தை தயாரிப்பது
கட்டாயமாகும்.
- இந்த திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (NREGS) போன்ற
திட்டங்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு ஊக்கமளிக்க படும்.
- 100% நிதியும் மத்திய அரசு வழங்கும்.
- மாநில அரசானது பின்வரும் ஆண்டுகளில், வேளாண் துறைக்கான திட்ட
செலவினத்தை குறைப்பதனால், RKVY-யிலிருந்து விலகினால்,
நடைமுறையில் உள்ள, ஆரம்பிக்கப்பட்ட அனைத்து திட்டத்தையும் செயல்படுத்த
தேவையான அனைத்தையும் மாநில அரசே பார்த்து கொள்ள வேண்டும்.
- இந்த திட்டம் செயல்பாட்டை பொருத்து ஊக்கத் தொகை வழங்கும்
திட்டமாதலால், வரையறுக்கப்பட்ட நிதி அப்படியே ஒதிக்கீடு
செய்யப்படமாட்டாது.
- வேளாண் மற்றும் அதைச்சார்ந்த துறைகளை சீரிய முறையில் ஒருங்கிணைக்கும்
திட்டமாகும்.
- மாநில அரசுக்கு அதிக அளவிலான தெளிமை அளிக்கப்படும்.
- காலவரையறுக்கப்பட்ட திட்டங்கள் ஊக்கமளிக்கப்படும்.
|
|
-
- பயிர் பராமரிப்பு (தோட்டக்கலை உள்பட)
- கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளர்ப்பு.
- வேளாண் வர்த்தகம்.
- உணவு சேமிப்பு மற்றும் கிடங்கு.
- மண் மற்றும் நீர் பாதுகாப்பு.
- வேளாண் நிதி நிறுவனங்கள்.
- ஏனைய வேளாண் திட்டங்கள் மற்றும் கூட்டுறவு.
|
|
-
- ஒருங்கிணைந்த உணவு பயிர் மேம்பாடு ( முக்கிய தானியங்கள், சிறு
தானியங்கள் மற்றும் பயறு வகைகள் உட்பட)
- வேளாண் இயந்திரமயமாக்குதல்.
- மண் வளம் மற்றும் மகசூல்.
- மானாவரியில் ஒருங்கிணைந்த பண்ணைய மேம்பாடு.
- ஒருங்கிணைந்த பூச்சி மேளாண்மை
- மார்க்கட் கட்டமைப்பு.
- தோட்டக்கலை.
- கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு.
- காலம் வரையறுக்கப்பட்ட திட்டத்தை தீட்டி முடிப்பதற்கான உதவி.
- வேளாண்மை மற்றும் தோட்டக்கலையை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு
உதவுவது.
- இயற்கை மற்றும் உயிர் உரங்கள்.
- புது யுக்திகள் உடைய திட்டங்கள்.
|
|
-
|
11-ஆம் ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த முதலீடு, ரூபாய் 25,000 கோடி
ஆகும்.
|
|
-
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பண உதவி பெறும் வகையில்,
பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகள்
இத்திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பட்டு
வளர்ப்பில், கக்கூன் உற்பத்தி பருவம் வரையும், பட்டு தொழிளில் கக்கூன்
உற்பத்தி மற்றும் பட்டு நூல் உற்பத்திக்கான விரிவாக்க திட்டங்களுக்கும்
அதன் விற்பனைக்கும் இத்திட்டம் மூலம் உதவி அளிக்கப்படும்.
எனவே, தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் பயன்பாடுகளை இனி
பட்டுப்புழு வளர்ப்பு, விரிவாக்கப் பணி, மண் வள மேம்பாடு, மானாவாரியில்
பட்டுப்பழு வளர்ப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை
ஆகிய துறைகளில் பெற முடியும். பட்டுப்புழு விதை ஆதாரத்தை மேம்படுத்தவும்,
இத்துறையை இயந்திரமயமாக்கவும் இத்திட்டத்தின் பயன்பாடுகள் உதவியாக
இருக்கும். அரசாங்கத்தின் இந்த முடிவானது, விற்பனைக் கட்டமைப்புகளை
மேம்படுத்தவும், பட்டுப்பூச்சி வளர்ப்பு தொழிலை மேம்படுத்தவும் உதவியாக
இருக்கும். இதன் மூலம், பட்டுப் பூச்சி வளர்க்கும் விவசாயியின் வருமானத்தை
அதிகரிக்க, பண்ணை சாரா செயல்பாடுகளை ஆதரிப்பதற்கான திட்டங்களும், சிறு
மற்றும் குறு விவசாயிகளின் நிலத்தை சீர்திருத்தம் செய்வதற்கான
பணிகளுக்கும் தனிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்த முடியும்.
மூலம்: http://pib.nic.in/release/release.asp?relid=62644&kwd=
|
|
மூலம் www.agricoop.nic.in
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்திற்கான (NADP) / RKVY-
க்கான வழிகாட்டு முறைகள்.