இந்திய வேளாண்மை - எதிர்வரும் சவால்களை நோக்கி
இந்தியக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில்களும் வாழ்வாதாரமாக உள்ளன. நாம் தற்பொழுது ‘மின்னனு புரட்சியில்’ நுழைந்துள்ளோம். இதன் விளைவாக நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் நிகழ்கின்றன. இதற்கு வேளாண்மை மட்டும் ஒரு விதிவிலக்கல்ல. வேளாண்மையை முதன்மையாகக் கொண்டு வாழும் கிராமப்புற மக்களுக்கு, மாறி வரும் புதிய நுட்பங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிவிப்பது அவசியம் மட்டுமின்றி நமது பொறுப்புணர்வும், கடமையும் கூட.
www.indg.in வேளாண் பகுதி, புதிய கண்டுபிடிப்புகளையும், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களையும், பயனுள்ள தகவல்களையும் வேளாண் சமூகத்திற்கும், ஊரக பகுதிகளில் பணியாற்றும் சேவையமைப்பாளர்களுக்கும் எளிய தமிழில் வழங்குகிறது. விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், தொழில்முனைவோர், பண்ணை இயந்திர விற்பனையாளர்கள், உரம் மற்றும் இரசாயணப் பொருள் குழுமங்கள், காப்பீட்டு அலுவலர்கள், உழவியல் நிபுணர்கள், பண்ணை ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் ஆகியோருக்கு இடையே இண்.டி.ஜி ஒரு பாலமாக செயல்படும்.
வேளாண் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த வேளாண் நடைமுறைகள், வேளாண் கடன்வசதி, பண்ணை சார்ந்த தொழில்கள், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், விளைபொருள் விற்பனை பற்றிய தகவல்கள், வேளாண்மை சார்ந்த சேவைகள் போன்ற பயனுள்ள தகவல்கள் வலைதளத்தின் வேளாண்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
வேளாண்துறையில் ‘அறிவு சார்ந்த சமுதாயத்தை’ எதிர்நோக்கி
-
தேவையான நேரத்தில், தேவைக்கு ஏற்ப நம்பகமான தகவல்களை உங்களது மொழியிலேயே எங்களது வலைதளத்தில் கொடுக்கிறோம்.
-
வேளாண் வல்லுனர்களிடம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், நாள்தோறும் மேற்கொள்ளும் வேலைகளைத் திட்டமிடவும் வழிவகுக்கிறோம்.
-
உங்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப, அனைத்து விரிவாக்க மற்றும் ஆலோசனை சேவைகளை கிடைக்க வழி செய்கிறோம்.




