இன்றைய துணுக்குகள்

விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திற்கு 100% அரசு மானியம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகள் வழியாக நடத்தப்படும் உழவர்களுக்கான கணிணி வழியில் நடைபெறும் கல்வித்திட்டம்.


 

துணுக்கு 1

தென்னக்கன்றினை தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுபடுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் இதில் விழுந்து இறந்துவிடும்.



துணுக்கு 2

தென்னையில் மகரந்த சேர்க்கையை அதிகரித்து அதிக காய் பிடிக்க ஏக்கருக்கு ஜந்து தேனீ பெட்டிகளை வைக்கவும். தேன் கிடைப்பது இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.



துணுக்கு 3

களர் நிலத்தை விளைநிலமாக மாற்ற பனை ஓலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வயல் முழுக்க பரப்பி விடவேண்டும். இரண்டு மாதத்தில் இது மட்கிவிடும் மூன்று முறை இவ்வாறு தொடர்ந்து செய்தால் களர் நிலம் வளமான நிலமாகும்.



துணுக்கு 4

விதைகளை சேமிக்க ஒரு யோசனை... புது மண்பானையை மாட்டு சிறுநீரால் கழுவி, ஒரு நாள் முழுக்க நிழலில் உலர வைத்து, இரண்டாவது நாள் வெயிலில் உலர வைத்து மூன்றாவது நாள் விதைகளை அதில் போட்டு மூடி வைத்தால், குறைந்தது இரண்டு வருடம் வரை விதைமுளைப்பு தன்னை குறையாமல் இருக்கும்.



துணுக்கு 5

கரும்பில் வெள்ளைக் கம்புளி அசுவினியைக் கட்டுப்படுத்த அசபேட் 75 SP (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) மருந்தை, தாக்கப்பட்ட வேர்களில்  தெளித்தால் சிறந்த நீண்ட நாள் பலன் கிடைக்கும்.



துணுக்கு 6

பயிர் சுழற்சியில் பயிறுவகை பயிர்களை சாகுபடி செய்தல் நன்று.



துணுக்கு 7

பயிறுவகைப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க இரண்டு சதவித டீஏபி கரைசலைத் தெளிப்பீர்.



துணுக்கு 8

இரத்த சோகையை தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவுடன் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் நிறைந்த உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



துணுக்கு 9

ஆடுகளை சாதாரண கொட்டில் முறையில் வளர்ப்பதை விட பரண்மேல் வளர்க்கும் போது ஒட்டுண்ணிகள் தொந்தரவு குறையும். மேலும் புழுக்கைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம்.



துணுக்கு 10

கொண்டைக் கடலை மற்றும் பட்டாணி போன்ற பயறு வகை விதைகளை கடுகு எண்ணெய்யில் நேர்த்தி செய்து நீண்ட காலம் சேமிக்கலாம்.



துணுக்கு 11

எசணி, பாகற்காய், பீர்க்கங்காய் மாதிரியான காய்கறி விதைகளை சூரிய ஒளியில் உலர்த்தி சாம்பலில் கலந்து சேமித்து அடுத்தப் பருவ பயிர் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்.



துணுக்கு 12

ஒரு மூட்டை அரிசியில் 10 - 15 காய்ந்த மிளகாய்களை போட்டு வைத்தால் வண்டு தாக்குதல் இருக்காது.



துணுக்கு 13

உளுந்து, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகிய பயிறு வகை பயிர்களை சேமிச்சு வைக்கும் போது சாக்கு\ டிரம்ல் முதல் கைப்பிடி அளவு உப்பை அடியில் போட்டிட்டு, அதன் மேல் பயிறுகளை கொட்டி சேமிக்கனும். இப்படி செய்தால், எச்சி, பொட்டு எதுவும் வராது.



துணுக்கு 14

பொதுவாக எருமை மற்றும் மாடுகளுக்கு கொடுக்கும் அடர்தீவனத்தில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஆனால் அடர் தீவனம் மட்டும் கொடுப்பதால் சத்துகள் கிடைத்தாலும் வயிறு நிறைவு பெறாது. மேலும் வயிறு கட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. வைக்கோல், புற்கள் ஆகியவை கொடுக்கும் போது அதில் நீர்ச்சத்தும் இருப்பதால் வயிறு நன்கு நிறைவு பெற்ற உணர்வு ஏற்படும். உலர் தீவனம் பால் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நல்ல ஆரேக்கியத்திற்கு பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம் ஆகியவை தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும்.   



துணுக்கு 15

பருத்தியில் சொலினாப்ஸிஸ் மாவுப்எச்சி, பினாக்காகஸ் சொலினாப்ஸிஸ் தாக்கம் மற்ற மாவுப்எச்சிகளை விட அதிகமாக இருக்கறது. மாவுப்எச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க உயரியல் எச்சிக்கொல்லிகளான வெர்டிஸியம் லெக்கானி (10 கிராம் / லிட்டர்) மற்றும் பிவேரியா பெஸியானா வை (10 மிலி / லிட்டர் ) அதிக ஈரப்பதம் கொண்ட ஆகஸ்டு - அக்டோபர் மாதங்களில் தெளிக்கவும்.




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: