|
|
விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகப்படுத்தும்போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிக்கொல்லி மற்றும் உயிர்ப்பூச்சிக்கொல்லி மருந்துகளை
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க
வேண்டும்
- ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நில அளவுக்கு உபயோகிக்கத் தேவையான
பூச்சிக்கொல்லி மருந்தினை மட்டுமே வாங்க வேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்து அட்டை அல்லது பாட்டிலின் மீதுள்ள
அப்பூச்சிக்கொல்லி அங்கீகரிக்கப்பட்டதற்கான விவரத்தினைப்
பார்க்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி செய்த பேட்ச் எண், பதிவு எண்,
உற்பத்தி செய்த நாள், உபயோகிப்பதற்கான காலக்கெடு போன்றவற்றை
பார்க்கவும்
- பூச்சிக்கொல்லி மருந்து நன்றாக பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று
பரிசோதித்தல் அவசியம்
|
- அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து பூச்சிக்கொல்லிகளை
வாங்கக்கூடாது
- ஒரு பருவத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக
வாங்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் அல்லது பாக்கெட்டில்
அங்கீகரிக்கப்பட்ட லேபிள் இல்லாதவற்றை வாங்கக்கூடாது
- உபயோகிப்பதற்கான காலக்கெடு முடிந்த பூச்சிக்கொல்லிகளை
வாங்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் பாட்டிலில் கசிவு அல்லது அவற்றின்
சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கக்கூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிற்கு வெளியே வைக்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்துகளை அவை வாங்கிய பாட்டிலிலேயோ அல்லது பையிலேயோ
வைக்கவேண்டும்.
- பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை தனிதனியே வைக்க
வேண்டும்.
- பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்திருக்கும் இடத்தில் அபாயத்தினை
குறித்து எழுதி வைக்கவேண்டும்
- குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு எட்டாத வகையில் பூச்சிக்கொல்லி
மருந்துகளை வைக்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரியவெயில் மற்றும் மழையிலிருந்து
பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
|
- பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுபுறத்திலோ
வைக்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்துகளை அவைகளுடையது அல்லாது வேறு பாட்டில்களிலோ
அல்லது பைகளிலோ மாற்றி வைக்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வைக்க
கூடாது.
- பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் இடங்களில் குழந்தைகளை
அனுமதிக்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரிய வெயில் மற்றும் மழையில் படுமாறு
வைக்கக்கூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிக்கொல்லி மருந்துகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் போது
தனியாக கொண்டு செல்ல வேண்டும்
- வயல்களில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக கொண்டு
செல்லும்போது கவனமாக கொண்டு செல்லவேண்டும்
|
- எப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவு, தீவனம் மற்றும் இதர
உண்ணும் பொருட்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக எடுத்துச்செல்லும்போது தோளிலோ,
தலையிலோ அல்லது முதுகிலோ சுமந்து செல்லக்கூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- எப்பொழுதும் சுத்தமான தண்ணீரையே உபயோகிக்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி கரைசலை தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளான கை உறை,
முகக்கவசம், தொப்பி, கோட், முழுக்கால் பான்ட் மற்றும் இதர உடைகளை உடல்
முழுவதும் மூடிக்கொள்ளுமாறு அணிந்து கொள்ளவேண்டும்
- தெளிக்கும் போது பூச்சிக்கொல்லி மருந்து உங்கள் கண், மூக்கு, காது, கை
போன்ற உறுப்புகளின் மேல் படாதவாரு பாதுகாத்து கொள்ளவும்
- பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில்
அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதன்படி
உபயோகிக்கத் தவறக்கூடாது
- தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை தயாரிக்கவேண்டும்
- குருணைவடிவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை அப்படியே உபயோகிக்க
வேண்டும்
- பூச்சிக்கொல்லி கரைசலை தெளிப்பானில் ஊற்றும் போது கீழே
சிந்தக்கூடாது
- பூச்சிக்கொல்லி, பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிக்கவேண்டும்
- உங்கள் உடல்நலத்தினை பாதிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது
|
- சேறு கலந்த அல்லது தேங்கிய தண்ணீரை உபயோகிக்கக்கூடாது
- பாதுகாப்பு உடைகளை அணியாமல் பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்க
கூடாது.
- உடம்பின் பாகங்களில் பூச்சிக்கொல்லி படுவதை தவிர்க்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில்
அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கத்
தவறக்கூடாது.
- 24 மணிநேரத்திற்கு முன்பு தயாரித்த பூச்சிக்கொல்லி கரைசலை
உபயோகிக்கக்கூடாது
- குறுணை பூச்சிக்கொல்லியை தண்ணீரில் கலந்து தெளிக்கக் கூடாது
- பூச்சிகொல்லி தெளிப்பானை நுகரக் கூடாது
- தேவையான அளவுக்கு மேல் பூச்சிகொல்லியை உபயோகிக்கக் கூடாது. அவ்வாரு
செய்வது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்
- பூச்சிகொல்லிகளை கையாளும் போது சாப்பிடுவது, குடிப்பது,
புகைப்பிடிப்பது, பான்பராக் மெல்லுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான உபகரணங்களைத் தேர்வு
செய்யவேண்டும்
- பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான அளவு துவாரமுடைய உபகரணத்தை
தேர்வு செய்யவேண்டும்
- களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் தனித்தனி
தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும்
|
- பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க, கசியும் அல்லது குறையுடைய
உபகரணங்களைத் தேர்வு செய்யக்கூடாது
- கோளாறுடைய அல்லது பரிந்துரைக்கப்படாத துவாரம் கொண்ட உபகரணங்களை
உபயோகிக்கக்கூடாது. மேலும் அடைத்துள்ள உபகரணத்தின் மருந்து தெளிக்கும்
துவாரத்தினை சுத்தம் செய்ய வாயினால் ஊதக்கூடாது. மாறாக பல்துலக்கும்
பிரஷ்ஷினை தெளிப்பானுடன் கட்டிக்கொண்டு துவாரத்தினை சுத்தம் செய்ய
உபயோகிக்கலாம்
- களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஒரே
தெளிப்பானை உபயோகிக்ககூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே
உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல்
தயாரிக்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான
சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்
- பொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி
அடிக்கவேண்டும்
- பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும்
உபயோகிக்கவேண்டும்
- காற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை
தெளிக்கவேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை
சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்
- பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும்
விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது
|
- பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை
உபயோகிக்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக
உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது
- மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி
மருந்துகளைத் தெளிக்கக்கூடாது
- பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த
பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது
- காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை
அடிக்கக்கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை
நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது
- பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த
வயலுக்குள் செல்லக்கூடாது
|
|
|
-
| செய்யவேண்டியவை |
செய்யக்கூடாதவை |
- பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை தனியான
யாரும் உபயோகப்படுத்தாத இடத்தில் கொட்டிவிட வேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகப்படுத்தியபின்பு அது இருந்த
பாட்டில்களை கல் அல்லது குச்சி கொண்டு ஒடுக்கி நீர்நிலைகள் இல்லாத
இடத்தில் புதைத்துவிட வேண்டும்
- பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு முகம் மற்றும் கைகளை சோப்பு
போட்டு நன்றாக கழுவிய பின்பே உணவருந்த செல்லவேண்டும்
- விஷம் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால் முதலுதவி அளித்தபின்பு
மருத்துவரிடன் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். கூடவே பூச்சிக்கொல்லி
மருந்து பாட்டிலையும் எடுத்துச்செல்ல வேண்டும.
|
- பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை குளத்திலோ
அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ கொட்டக்கூடாது
- காலியான பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை மற்ற பொருட்களை
சேமித்துவைக்க உபயோகப்படுத்தக் கூடாது
- பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு குளிக்காமலோ அல்லது துணிகளைத்
துவைக்காமலோ சாப்பிடச் செல்லக்கூடாது
- விஷம் தாக்கிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம்
செல்லத்தயங்கக்கூடாது. ஏனெனில், விஷம் தாக்கியவர் உயிருக்கு ஆபத்து
ஏற்படக்கூடும்
|
|
|
மூலம்:www.ppqs.gov.in
|
|