தென் கிழக்கு இராஜஸ்தான் பகுதிகளுக்கான நீர் சேமிப்பு தடுப்பணைகள்

வறண்ட மானாவாரி பகுதிகளில், குறைந்த, நிலையற்ற பயிர் சாகுபடி மற்றும் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியவை பெரும் பிரச்சனைகள் ஆகும். அதிகப்படியான மற்றும் சீரில்லாத மழை மற்றும் மண்ணின் குறைந்த நீர் உறிஞ்சும் தன்மையினால், தென் கிழக்கு ராஜஸ்தானில் அதிக மழை நீர் வடிந்து வீணாவதுடன், மண் அரிப்பு பாதிப்புகள் உருவாகிறது. இப்பகுதிகளில், தடுப்பு அணைகள் மூலம் மழைநீர் சேகரிக்கலாம்.

இந்த அமைப்பில் நிலத்தை நில சரிவில் 2:1 என்ற விகிதத்தில் பிரிக்க வேண்டும். கீழே உள்ள 1 பங்கு நிலப்பகுதி, சமபடுத்தப்பட்டு மேலே உள்ள 2 பங்கு பகுதியிலிருந்து வடிந்து வரும் மழைநீர் தேங்குமாறு அமைக்க வேண்டும். மேலே உள்ள 2 பங்கு நிலத்தில் காரீப் பருவத்தில் சோளம் மற்றும் துவரை (ஊடுபயிர்) அல்லது சோயா பயிரிடலாம். கீழே உள்ள 1 பங்கு நிலம், மழை காலங்களில் நீர் சேகரிக்க பயன்படுத்தப்படும். பின்பு, ராபி பருவத்தில், இதில் கடுகு அல்லது பயறு வகைகளை பயிரிடலாம். இரண்டு சதவீதம் சரிவு கொண்ட நிலத்தில், தடுப்பணை அமைக்க, ஒரு ஹெக்டருக்கு ரூ.3,022 செலவாகிறது.

தடுப்பணை அமைப்புகள் மூலம் கீழ்கண்ட பயன்கள் உண்டு.

  • பயிர் காலங்களில் ஏற்படும் மழைநீர் இழப்பை 50 சதவீதம் வரை குறைக்கலாம்.
  • நீரினால் ஏற்படும் மண் அரிப்பை 3.8-11 டன்கள்/ஹெக்டர் இருந்து 2.2-3.2 டன்கள்/ஹெக்டர் என்ற அளவுக்கு குறைக்கலாம்.
  • தானியம் மற்றும் தட்டை உற்பத்தி 78.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
  • வரவு : செலவு வீதம் 1.4:1 ஆக இருக்கிறது.
  • மண் மற்றும் அதில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்படுகிறது.

இந்த அமைப்பு வறண்ட பகுதிகளில், மிதமான சரிவு (2-5%) மற்றும் போதுமான மண் ஆழம் உள்ள நிலங்களில், மண் அரிப்பு தடுப்பு மற்றும் ஈரப்பதம் பாதுகாத்தலுக்கும் பயன்படும். இதனால், மண் வளமும் பயிர் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

மூலம் /மேலும் விபரங்களுக்கு,
மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்,
218, கௌலாகார், டேராடூன்,
உத்தராகாண்ட் – 248 195
மின்னஞ்சல்: vnsharda1@rediffmail.com


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: