வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடைCurrently 2 replie(s)
Re: Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
by
Anonymous user
—
created
May 06, 2009 10:29 AM
http://vivasayam.wordpress.com/2009/05/05/மொட்டை-மடியில்-காய்கறி-ச/
Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
by
Kathiresan
—
created
March 25, 2008 01:29 PM
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி, தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.
அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
திரு சுல்தான் அவர்களே, தயவுசெய்து உங்கள் ஊர் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.
முனைவர் கதிரேசன்,
வேளாண்மை, இண்.டி.ஜி.



ஐயா!
நான் எனது வீட்டு மொட்டை மாடியில்(600 ச.அடி காலி இடம்) சிறிய அளவிளான காய்கறி தோட்டம் அமைக்க விரும்புகிறேன். இதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
er-sulthan