நிபந்தனைகள்
இந்தியா டெவலப்மன்ட் கேட்வே வலைவாசல் தகவல்கள், விவரங்கள் ஆகியன, நம்பகமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயங்குகிறது. இந்ததகவல்கள் பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டவை. அதே சமயத்தில் கேட்வே - யின் உள்ள எல்லா விதமான புள்ளி விபரங்கள், தகவல்கள் போன்றவை பல்வேறு வலையதலங்கள், தகவல் திரட்டுகள் போன்றவற்றிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டு விவரங்களாகத் தரப்பட்டுள்ளன. இவற்றில் எதையும் இந்த இணையக வலைவாசல், உருவாக்கவோ உரிமை கோரவோ இல்லை.
இவற்றில் காணப்படும் விவரங்களில், தகவல்களை அடிப்படையாகக் கொண்டவைகளை, முடிந்த வரையில் துல்லியமாகத் தருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன. பல்வேறு வலயங்கள், திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகள், விவரிப்புகள் போன்றவற்றில் காணப்படும் அபிப்பிராயங்கள், கருத்துக்கள் ஆகியன சிடாக் மற்றும் இந்தியா கேட்வே - யின் அதிகாரப்பூர்வமான கருத்துக்களோ, அபிப்பிராயங்களோ அல்ல.
1. எந்த விஷயத்தின் மீதோ, அல்லது உதாரணம் காட்டப்பட்டுள்ள விஷயத்தின் மீதோ இருக்கும் உத்திரவாதங்கள், நிபந்தனைகள் ஆகியன நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருந்தால் அவற்றிற்கான பொறுப்பு அல்லது கட்டுப்படுதல் போன்றவை சிடாக் மற்றும் இந்தியா கேட்வேயை கட்டுப்படுத்தாதது. இதைத் தவிரவும் மறைமுகமாகக் குறிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள் மற்றும் அல்லது இவற்றின் வியாபாரம் மற்றும் விற்பனைத் தன்மை, திருப்தி அளிக்கும் வகையிலான தரவரையறைகள், மற்றும் குறிப்பிட்ட விரயத்திற்கான தகுதிநிலை உறுதிப்பாடுகள், பிறர் உரிமைகளில் தலையிடாமை போன்றவை குறித்த நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்றவை இருந்தால் இந்த வலையகம் பொறுப்பேற்காது.
2. சிடாக் மற்றும் இந்தியா கேட் வேயின் மேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் (இதில் லாபத்தில் நஷ்டங்களுக்காகவும், தொழில் தலையீடுகள், தடைகள், தகவல்கள் இழக்கும்/ பறிபோகும் நிலை ஏற்படல் போன்றவற்றிகாக, இந்த வரையறைகளுக்கு உட்பட்டோ, வரையறைகள் இல்லாமலோ) இருக்கும் விஷயங்களை எடுத்தாள அல்லது உபயோகிக்க முடியாமல் போனாலும் இவ்வாறான நஷ்டங்கள் ஏற்படும் என்று ஏற்கனவே சிடாக் அறிவுறுத்தப்பட்டு இருக்கும் இருந்தாலும்கூட இவற்றால் ஏற்படும் எந்த வகை நஷ்டங்களுக்கும் வழக்குத் தொடர முடியாது.
3. இந்த வலையகத்தில் காணப்படும் விஷயங்கள், தகவல்கள் ஆகியன தடையற்ற விதத்தில் தொடர்ந்து இருக்கும் என்றோ, தவறுகள் ஏதும் இருக்காது என்றோ, இத்தகைய தவறுகள் களையப்படும் என்றோ, இந்த வலையகமோ இதைத் தரும் “சர்வரோ” (ஷிமீக்ஷீஸ்மீக்ஷீ) வைரஸ்களோ அல்லது கெடுதியை உண்டாக்கக் கூடியவையாக இருக்காது என்றோ, சிடாக் மற்றும் இந்தியா கேட்வே உத்திரவாதம் அளிக்கவில்லை.
4. இந்த வலையகத்திலிருந்து நீங்கள் டெளன்லோடு செய்யும் விஷயங்களோ, அல்லது இந்த வலையகத்தை உபயோகப்படுத்தியதால் கிடைக்கும். விஷயங்கள் பொருள்கள் ஆகியன உங்களது குழுவின் அடிப்படையில்தான் செய்யப்பட்டது. இதனால் உள்ளது கணினியில் ஏற்படும் எந்தவிதமான பழுது, நஷ்டம் ஆகியவைகளுக்கு நீங்கள் மட்டும்தான் பொறுப்பு.
5. இந்த வலையகத்தின் மூலமாக பெறப்பட்ட அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்ட எந்தப் பொருளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எல்லா விதமான வர்த்தகப் பரிமாற்றங்களுக்கோ இந்த வலையகம் எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கவில்லை.
6. எந்தச் சூழ்நிலையிலும் நேரடியான, மறைமகமான, தற்காலிகமான, தண்டனைப்பெறத்தக்க, சிறப்பு வகையான அல்லது அதன் விளைவாக ஏற்படும் நஷ்டங்கள், கீழ்காணும் சூழ்நிலைகளில் ஏற்பட்டால் அதற்காக சிடாக் இந்தியா கேட்வே ஆகியவற்றின் மேல் வழக்குத் தொடரவோ, பொறுப்பாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.
அ) வலையகத்தைப் பயன்படுத்த முடியாத, அல்லது பயன் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது.
ஆ) இந்த வலையகத்தின் மூலம் விலை கொடுத்து வாங்கப்பட்ட பொருட்கள் சேவைகள், வலையகத்திலிருந்து தெரிந்த தகவல்களின் மூலம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், ஆகியவற்றால் ஏற்படும் தகாச் செலவுகள், கூடுதல் செலவுகள், இவற்றில் ஏற்படக்கூடிய விரயங்கள் ஆகியவற்றிற்காக ஈடு கேட்பதற்கு...
இ) வலையகத்தில் உள்ள மற்ற விஷயங்களால் பிரச்சனைகள் ஏற்ப்பட்டால்
ஈ) வலையகத்திற்குச் சம்பந்தப்பட்ட பிற விஷயங்களால் அதுவும் இவ்வாறான நஷ்ட விளைவுகள் ஏற்படும் என்று முன்பாகவே சிடாக் எச்சரிக்கப்பட்டிருந்தாலும் கூட மேற்கண்ட நிலை பொருந்தும்.
ஏனெனில், உபயோகத்தின் விளைவாகவோ, தற்செயலான நிகழ்வுகளாகவோ பாதிப்பு உண்டானால், அவற்றிற்காக வழக்குத் தொடர முடியாது. நஷ்ட ஈட்டிற்கான வரைமுறை உண்டு என்பதை நீதி மன்ற அதிகார எல்லைப் பகுதிகளில் நடைமுறையாக இருந்து வருகிறது. இத்தகைபய வரையறைகள் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். சி டாக் கில் சர்வதேச அளவிலான புள்ளிவிரங்களை உங்களால் பெற முடியும். சிலவற்றில் உங்களது நாட்டில் இன்னும் அறிவிக்கப்படாத புதிய பொருட்கள், திட்ட விவரங்கள் மற்றும் சேவைகளும் இதில் காணப்படலாம். இம்மாதிரியான குறிப்புகள ்இருப்பதனாலேயே இவை உங்களது நாட்டின் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று இருப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது.







